அதிமுக - பாஜக - தவெக கூட்டணி? யாருக்கு எத்தனை சீட்? இது எதிர்பார்க்காத கணக்கா இருக்கே? அப்போ விஜய்
சென்னை: அதிமுக - பாஜக - தவெக கூட்டணி அமையும் பட்சத்தில் யாருக்கு எத்தனை சீட் கூட்டணியில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் முக்கியமான கிசுகிசு ஒன்று சுற்றி வருகிறது.
பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். அதில், தவெக நடிகர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு என பேச்சுவார்த்தை எனக்கு தெரியவில்லை.. இந்த அரசல் புரசல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை, நேற்று நான் மோடி மற்றும் அமைச்சவை அவர்களை சந்தித்தேன்,
இன்று உங்களை சந்திக்கிறேன் நாளை கோட்டையில் சந்திப்போம். காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனம் செய்து வந்தவுடன் சொல்கிறேன் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும், என்று நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

கூட்டணிக்குள் இழுக்க முடிவு
இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாது.
எத்தனை இடங்கள்?
அதிமுக - பாஜக - தவெக கூட்டணி அமையும் பட்சத்தில் யாருக்கு எத்தனை சீட் கூட்டணியில் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவே குறைந்தபட்சம் 120 இடங்களில் கண்டிப்பாக போட்டியிடும்.
114 இடங்களை தவெக + பாஜகவிற்கு வழங்குவார்கள். அதாவது கூட்டணி அமையும் பட்சத்தில் 114 இடங்களை இந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் பங்கிட்டுக்கொள்ளும்.
5 வருடங்கள் எடப்பாடியேதான் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள மாட்டார். அதோடு விஜய்க்கு இரண்டரை வருடங்கள் எல்லாம் கண்டிப்பாக முதல்வர் பதவி கிடைக்காது.
வேண்டுமென்றால் துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. ஆனால் அதுவும் சந்தேகம்தான்.. அமைச்சரவையில் வாய்ப்பும் சந்தேகம்தான்.. இந்த சந்திப்புகளை தொடர்ந்தே 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.
இது போன்ற விஷயங்கள் விஜயுடன் பேசப்பட உள்ளதாம். என்று அதிமுக-பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது., முக்கியமாக யாருக்கு எங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளது
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications