ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி சுற்றுச்சுவர்..தமிழக அரசு ஹைகோர்டில் தந்த உறுதி
சென்னை: ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தால், அந்த தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் அகற்றப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்த திருவண்ணாமலை கல்லூரி வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே ஏரியும், பாசன கால்வாயும் அமைந்துள்ளன. இந்த தண்ணீர் தான் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர்தேவையை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த ஏரி, பாசன கால்வாயை ஆக்கிரமி்த்து தனியார் பொறியியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் இயற்கையாக இருந்த நீர்வழித்தடம் மாறி இருக்கிறது
ஏரி நீரை ஆதாரமாகக் கொண்டிருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரியின் கழிவு நீரும் ஏரியில் கலக்கிறது. இந்த ஏரி, பாசன கால்வாய் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்லமுடியாதபடி கல்லூரி நிர்வாகம் தடை உத்தரவு போட்டிருக்கிறது.
இந்த ஏரி,பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.மகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். அவர் கூறும் போது, ஏரி பாசன கால்வாயை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை கட்டியுள்ளதால் நீர்வழித்தடம் தடைபட்டு, அதை நம்பியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்
அப்போது மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும் போது, மனுதாரர் குறிப்பிடுவதுபோல தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையிலான குழு களஆய்வு செய்யும்.அப்படி ஆக்கிரமிப்பு இருப்பதாக தெரியவந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications