வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போனால், திங்கட்கிழமை தான்! மதுராந்தகத்தில் விஜய்யை விளாசிய எடப்பாடி
சென்னை: முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு சென்றால், திங்கட்கிழமை தான் வருவார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு. குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.. மதுராந்தகம் தொகுதியில் தவெக டெபாசிட் இழக்க வேண்டும். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது, சிதறிப்போய்விடும். என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இடைத்தேதலை முன்னிட்டு மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கனிகா சம்பத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். எடப்பாடி பேசியதாவது:-

வெறும் ரீல்ஸ் தான்
தவெக ஆட்சி எல்லாம் வெறும் ரீல்ஸ்.. ரீல்.. ரீல்சும், ரீலும்தான் இந்த கட்சியினுடைய மூலதனம். இந்த இரண்டும் இல்லை என்று தவெக என்ற கட்சி பியூஸ் போன மாதிரி. ரியல் கட்சில்லை. ஆனால் அதிமுக கட்சி ரியல் கட்சி. பொன் விழா கண்ட கட்சி. தமிழகம் இன்று இப்படிப்பட்ட நிலைமைக்கு வர அதிமுக பாடுபட்டுள்ளது. முளைச்சு மூனு இலை விடல.. கட்சி ஆரம்பித்து மூனு வருஷம் கூட ஆகல. ஆனால் இவர் போடுகின்ற போடு சாதாரண விஷயம் அல்ல.
ஆனால் நான் 52 ஆண்டுகளாக அதிமுவில் மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவம் கூட அங்கு உள்ளவர்களுக்கு வயது கிடையாது. ஆனால் அவங்க பேசுகின்ற பேச்சு காது கொடுத்து கேட்க முடியாது. தீர்ந்து போன கட்சி என பேசுகிறாங்க.. அடக்கி வாசிங்க தம்பி.. தமிழகத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொலை நடக்காத நாட்களே இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. ஆனால் முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை ஆனால் மாலை வீட்டுக்கு சென்றுவிடுகிறார். அதற்கு பிறகு விஜய் திங்கட்கிழமை காலையில் தான் பணிக்கு வருகிறார். சினிமாவில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர் இப்போது நிஜ வாழ்விலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
எதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் போனார்?
உல்லாச சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடுக்கு சுற்றுலா போனாங்க.. வெளிநாட்டு சுற்றுப்பயணம் எதற்காக போனாங்க.. யார் எல்லாம் போனாங்க.. அது உங்களுக்கே தெரியும். நான் சொல்ல மாட்டேன்.. அங்கே சென்று என்ன முதலீடுகளை ஈர்த்தீர்கள்.. இங்க உள்ள நிறுவனங்களுக்கு லண்டனில் ஒப்பந்தம் ஏன்? சென்னையில் இருக்க நிறுவனத்திற்கு லண்டனுக்கு சென்று ஏன் ஒப்பந்தம் போடனும். யாருக்கு காது குத்தப் பாக்குறீங்க. ஆக தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் போகவில்லை. வேற எதற்கு போனாங்க என நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..
தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது
இப்போது வாய் கிழிய பேசும் தவெகவினர் கரூர் சம்பவத்தின் போது எங்கே போனார்கள். 2ஆம் கட்ட தலைவர்கள் கூட மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. இன்னைக்கு வேட்பாளர்களை குதிரை பேரம் செய்து வாங்கிவிட்டு இப்படி பேசுகிறார்கள். அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு. குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது.. மதுராந்தகம் தொகுதியில் தவெக டெபாசிட் இழக்க வேண்டும். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது, சிதறிப்போய்விடும்.
72 நாட்கள் வெளியே வரவில்லை
கரூர் பரப்புரையில் என்ன நடந்தது.. தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது உங்களை பார்ப்பதற்காக, உங்கள் பேச்சை கேட்பதற்காக வந்தார்கள். அந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அங்கு உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, அதை கூட பார்க்கமால் நீங்க ஓடு ஓடு என ஒரே அடியாக ஓடி விமான நிலையம் சென்று சென்னை சென்று வீட்டுக்கே ஓடி விட்டீங்க..
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அந்த கட்சியின் அலுவலகமே 15 நாட்கள் பூட்டப்பட்டு விட்டது. நீங்க தான் நாட்டு மக்களை காப்பாத்த போறீங்களா? இவர்களா நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள்.. உங்க கூட்டத்திற்கு வந்தவர்களையே பார்க்க முடியவில்லை. நீங்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும். பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். இதுமட்டுமா, இறந்தவர்களின் உறவினர்களை கூட வீட்டிற்கு சென்று பார்க்காமல் சென்னை வர வைத்து பார்த்தீங்க.. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. மக்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி அடுத்த நிமிடமே அவர்கள் கூட நிற்கும் கட்சி அதிமுக..


Click it and Unblock the Notifications
