"முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து.. ஆகவேதான் வாய் திறப்பதில்லை” - அமைச்சர் செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது. அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையில் எல்லா வகையிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உருவாக்குவதற்கு தவெக அரசு உறுதியாக இருக்கிறது. அடுத்த ஒரு ஜென்மம் இருக்குமேயானால் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்கவேண்டும் எனக் கூறியவர் முதல்வர் விஜய்.

If CM Vijay Opens His Mouth Many Are in Trouble TVK Minister Sengottaiyan

மேகதாது அணை கட்ட தமிழகம் அனுமதிக்காது. முதல்வர் விஜய் காலம் பொற்காலம். மேகதாது அணை விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மேகதாது அணைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கும். டெல்டா விவசாயிகள் நலனே அரசின் இலக்கு. தமிழக அனுமதியின்றி மேகதாது திட்டம் இல்லை. தமிழக நலனில் அரசு உறுதியாக உள்ளது. எல்லோரும் ஒருங்கிணைந்து தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், "முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது. அதனால் தான் அவர் வாய் திறப்பதில்லை" என பதில் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+