ஆட்சிமாற்றம் காங்கிரசுக்கு சாதகமானால்..அதிமுகவின் அத்தனை அதிருப்தி எம்எல்ஏக்களும் வெளியே வர வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுகவின் சரிவுக்கு காரணம் ஜெயலலிதா இறப்பு மட்டுமில்லைங்க!

    சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக ஆட்சிக்கு மாற்றம் ஏற்பட்டால் அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மே 23ம் தேதி நாளை மத்தியில் பாஜக ஆட்சியா அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியா என்பது தெரிந்துவிடும்.

    இந்த தேர்தல் முடிவு ஒருவேளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்ககூடிய அளவுக்கு மாறினால், அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து வெளிய வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    அதிமுக ஒற்றுமை

    அதிமுக ஒற்றுமை

    தற்போது உள்ள சூழலில் மத்தியில் உள்ள பாஜகவின் ஆதரவு காரணமாக அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து ஆட்சி நடத்தி வருவதாக எதிரக்கட்சியினர் சொல்லிக்கிறார்கள். ஆனால் அதேநேரம் மத்தியில் பாஜகவுக்கு பதில் காங்கிரஸ் என்ற நிலை வந்தால், திமுகவுக்கு சாதகமாக செயல்படும் என்பதால். அதிமுகவினர் மத்தியில் கலக்கம் உள்ளது.

    அதிமுக அதிருப்தியாளர்கள்

    அதிமுக அதிருப்தியாளர்கள்

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் மீதான புகார் பட்டியல்களை தூசி தட்டி எடுத்து வழக்கு போடவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மே23ம் தேதி தேர்தல் முடிவினை பொறுத்து அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    அமைச்சர் பதவி

    அமைச்சர் பதவி

    தற்போது உள்ள சூழலில் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 5 எம்எல்ஏக்கள் உள்ளதாக அதிமுக சந்தேகிக்கிறது. இத்தோடு தோப்பு வெங்கடாச்சலமும் அதிருப்தியில் உள்ளார். இதேபோல் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி, சரியான பொறுப்பு கிடைக்காத விரக்தியில் உள்ளவர்கள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், விலகி வர வாய்ப்பு உள்ளது.

    அதிமுகவுக்கு சிக்கல்

    அதிமுகவுக்கு சிக்கல்

    தற்போது உள்ள சூழலில் டிடிவி தினகரனின் அமமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் அவர் பின்னால் இன்னும் சில அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே காங்கிரஸ், பாஜக யார் ஆட்சிக்கு வந்தாலும், அதிமுக குறைந்த பட்சம் 6 முதல் 7 சட்டமன்ற தொகுதிகளில் வென்றால் ஆட்சியில் தொடரும். இல்லாவிட்டால் நிச்சயம் அதிமுகவுக்கு சிக்கல் தான் உருவாகும்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+