புது தலை வருகிறாராம்! தொங்கு நாடாளுமன்றம் வந்தால்.. மோடிக்கு பதில் ஆர்எஸ்எஸ் கொண்டு வரும் புது முகம்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்டிஏ ஆட்சிதான் அமைக்க வேண்டும் அல்லது தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக மோடிக்கு பதிலாக வேறு ஒரு முகம் முன்னிறுத்தப்படலாம் என்கிறார்கள்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன. 3 கணிப்புகளை தவிர மற்ற எல்லா கணிப்புகளும் பாஜக ஆட்சியை உறுதி செய்கின்றன. கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆக பதவி ஏற்பார்.

இப்படி 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளன. ஆனால் இன்னமும் பாஜக கேம்பில் இது குஷியை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் கணிப்புகள் சாதகமாக வந்து.. 2004 போல ட்விஸ்ட் ஆகி வாஜ்பாய் ஆட்சி போல பாஜக தோல்வி அடையும் வாய்ப்புகளும் உள்ளன.
ஆர்எஸ்எஸ் திட்டம்: முக்கியமாக பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைப்பது பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பே சந்தேகம் கொள்கிறதாம். அதாவது பாஜக தனியாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.. என்டிஏ ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம். என்டிஏ ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாஜகவிற்குள் பல உள் வேலைகளை பார்க்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத பட்சத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக ஆட்சியில் கடுமையான தலையீடுகளை செய்யும் என்று அந்த அமைப்பின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டம் என்ன?: அதன்படி மோடிக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரகலாத் ஜோஷியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் நினைக்கிறதாம். பிரகலாத ஜோஷி கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.
இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் நிர்வாகி. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர். பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இவரை பிரதமராக்க வேண்டும்.. இல்லையென்றால் என்டிஏ கூட்டணியை உடைப்போம்.. என்று ஆர்எஸ்எஸ் வறுபுறுத்த திட்டமிட்டுள்ளதாம்.
ஏன் மோடி வேண்டாம்: ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி - அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications