விஜய்யை போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது.. ரஜினிகாந்த் பேச்சு
சென்னை: விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ரஜினகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்திருக்கிறார்கள்.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வருகிறது. லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், "லால் என்றால் சிவப்பு என்று அர்த்தம்.. இந்த சிவப்பு நிறத்தை பொறுத்தவரை நிறைய அடையாளங்கள் இருக்கிறது. அதை கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்துவார்கள். வன்முறைக்கும் பயன்படுத்துவார்கள். புரட்சிக்கும் பயன்படுத்துவார்கள். என் மகள் ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்.
லால் சலாம் படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போதே, இந்த கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என ஐஸ்வர்யா சொன்னார். அப்போது அவரிடம் விருதுக்காக நான் கேட்கமாட்டேன் என்று கூறினேன். அதன் பிறகு இது உண்மை கதை என்று விளக்கினார். அப்புறம் தான் லால் சலாம் படத்தின் கதையை கேட்டேன். நடிப்பதற்கும் ஓகே சொன்னேன்.
லால் சலாம் படத்தை பொறுத்தவரை ரஜினிகாந்தே இந்த படத்தை தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார் என்று நிறைய பேர் பேசிகிட்டாங்க.'பாபா' படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லை என்று படம் எடுப்பதை நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாவிடம், நானே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் தான் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும், எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி மனசில் உள்ளே ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான்.
மத நல்லிணக்கம் பத்தி இந்த படம் முக்கியமாக பேசி உள்ளது. மனுஷங்க சந்தோசமாக இருக்கனுன்னுதான் மதம் உருவாகியது. இப்போ நான்தான் பெருசு, நீதான் பெருசுனு பேசிக்கறாங்க. எந்த மதத்துல உண்மை, நியாயம் இருக்கோ. அதுதான் சரியாக இருக்கும்.
சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டுடாங்க. எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன்.
'தர்மத்தின் தலைவன்' படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, 'என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்' என்றார். அப்போது நான் விஜய்யிடம் 'உங்களால் முடியுமா?' என்று கேட்டேன், முடியும் என்றார்.
அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்தார்.. உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலையாக உள்ளது.
எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறியிருக்கிறார. என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே சொல்லியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்" இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
முன்னதாக விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், என்னோட அப்பாவை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்துச்சு. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார் என்றார். அப்போது மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன்










Click it and Unblock the Notifications