பேட்டியை கவனித்தீர்களா.. அமைச்சர்கள் மாற்றம் குறித்து அமைச்சர் துரைமுருகன் சூசமாக சொன்ன உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம் என்று கூறிய துரைமுருகன், அமைச்சரவை மாற்றம் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதே அளவு தான் எனக்கும் தெரியும் என்றார்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், பணியில் சுனக்கம் உள்ள அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

if mk stalin willing can change Cabinet: Duraimurugan Interview on Cabinet Reshuffle in tamilnadu

மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும்,கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதிதுறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும் எஸ்.ரகுபதி தொழில்துறை அமைச்சராகவும் மாற்றப்பட உள்ளதாவும், மா.சுப்பிரமணியத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆவடி நாசர், கயல்விழி ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக டாக்டர் எழிலன், டிஆர்பி ராஜா, தமிழரசி அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவலகள் பரவி வருகின்றன. டாக்டர் எழிலனுக்கு மருத்துவம்,மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழரசிக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படும் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.

இதெல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வரும் ரூமர்கள் ஆகும். அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பிலோ அல்லது திமுக தரப்பிலோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிடிஆர் பெயரில் ஆடியோ வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவதாக சமூக வலைதளத்தில் சிலர் பற்ற வைத்த நெருப்பு, பற்றி எரிகிறது. கண்கள் காதுகள் வைத்து ஊடகங்களிலும் செய்திகள் வலம் வரத்தொடங்கி உள்ளது.

இதுபற்றி அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது அவர் எதற்கும் பிடிகொடுத்து பதில் அளிக்கவில்லை.அமைச்சரவை மாற்றமா யார் சொன்னது என்று கேள்வி எழுப்பியதுடன், அமைச்சரவை மாற்றம் என்றால் வரட்டுமே என்றார்.

முதல்வர் நினைத்தால் அமைச்சர்களை மாற்றலாம் என்று கூறிய துரைமுருகன், அமைச்சரவை மாற்றம் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியுமா அதே அளவே எனக்கும் தெரியும் என்றார். அமைச்சரவை குறித்து கேள்வியை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் கேட்க வேண்டியதை என்னிடம் கேட்கிறீர்களே என்று எதிர் கேள்வி எழுப்பினார். மேலும் அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கு தெரியாது என்று கூறிய துரைமுருகன், ஆளுநரை சந்திக்க தான் செல்லவில்லை என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+