முருகன் தமிழ்க் கடவுள் என்றால் சிவன் யார்? லாஜிக்காக கேட்டால் அவங்களுக்கு கோபம் வருது.. திருமாவளவன்
சென்னை: முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது அப்பா சிவபெருமானும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும். கைலாயம் தமிழரின் தேசம்தானே.. அப்போ ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர் தேசியம் தானே.. பார்வதி தமிழச்சி என்றால், மகன் கணபதி கணேசனும் தமிழனாக தானே இருக்க முடியும்.. அப்போது ஏன் கணேசனை யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்வதில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னையில் விசிக சார்பாக விருது விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் முருகன் தமிழ் கடவுள் என்றால் அவரது தந்தை சிவனும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும் என்று பேசினார். இது தொடர்பாக திருமாவளவன் பேசியதன் முழு விவரம் வருமாறு:-

சிவபெருமானே ஒரு சான்று
அதனால் தான் ஒரு கேள்வி எழுப்பினேன்.. இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது அப்பா சிவபெருமானும் தமிழ்க் கடவுளாகத் தானே இருக்க முடியும்.. முருகன் தமிழன் என்றால், சிவன் தமிழன் என்றால் பார்வதியும் தமிழச்சியாக தான் இருக்க வேண்டும்.
அப்போ சிவனும், பார்வதியும் கைலாய மலையில் இருக்கிறார்கள் என்றால், கைலாயம் தமிழரின் தேசம்தானே.. அப்போ ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர் தேசியம் தானே.. எங்கள் தமிழன் சிவபெருமான் கைலாயத்தில் குடியிருக்கிறார் என்றால், கைலாய மலையும் தமிழனுக்கு சொந்தம்.. அப்போ இமயம் முதல் குமரி வரை தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு சிவபெருமானே ஒரு சான்று.. அந்த கதையின் படி பார்த்தால்..
சிவன் தமிழன்.. பார்வதி தமிழச்சி என்றால், மகன் கணபதி கணேசனும் தமிழனாக தானே இருக்க முடியும்.. அப்போது ஏன் கணேசனை யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்வதில்லை. இதையெல்லாம் லாஜிக்காக கேட்டால் அவங்களுக்கு கோபம் வரும்.. இவ்வாறு அவர் பேசினார்.
பூசாரி நெற்றியில் திருநீறு பூசினார்
தொடர்ந்து திருமாவளவன் பேசியதாவது:- நோன்புக்கு போகிறேன். தலையில் தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமலே இருக்க முடியுமா? அடுத்த நிமிஷமே எடுக்கிறேன். அது அவுங்களுக்கே தெரியும். அப்போது.. பூசாரி நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உனர்வை நான் மதிக்கிறேன். வணக்கம் சொன்னேன். நன்றி சொன்னேன்.
கொஞ்ச நேரம்தானே வச்சிருக்க முடியும். அதை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க முடியுமா.. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நான் பூசிக்கொண்டு இருக்கவில்லை. அவமதிக்க வேண்டும் என்று நான் அழிக்கவில்லை. இது அற்பர்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தெரியாது. என் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் இன்றைக்கு கூட என்னை பல கோயிலுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன்.
இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை
கும்பத்திலே கலசத்திலே தண்ணீர் ஊற்ற சொல்கிறார்கள்.. ஊற்றுகிறேன். இதெல்லாம் 100 வருஷம் வாழனும் என்று ஆசைப்பட்டுத்தான் செய்கிறேனா.. என் தாய் என்னை வீட்டுக்கு வரவேற்கிற போது, ஆரத்தி எடுத்து நெற்றியில் திருநீறு பூசுகிறார். அதை ஏற்றுக்கொள்கிறேன்.
என் தாய்க்கு என்ன மதிப்பு கொடுக்கிறேனோ அப்படித்தான் என் மக்களுக்கும் மதிப்பளிக்கிறேன். அவ்வளவுதான்! நான் மக்கள் மீது கொண்டு இருக்கும் மதிப்பு அது. இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. அதனால்தான் அதை அரசு மதமாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications