அதிமுக ஆட்சியை காப்பாற்றுவோம்.. 10 நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.. புகழேந்தி அதிரடி முடிவு

அதிமுக ஆட்சியை சிப்பாயாக காக்க போகிறேன் என்று அமமுக கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அதிமுக ஆட்சியை காப்பாற்றுவோம்.. 10 நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.. புகழேந்தி அதிரடி முடிவு-வீடியோ

    சென்னை: அதிமுக ஆட்சியை சிப்பாயாக காக்க போகிறேன் என்று அமமுக கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

    அமமுக கட்சியில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி இடையிலான சண்டை தற்போது வலுத்துள்ளது. டிடிவி தினகரன் மீது நாளுக்கு நாள் புகழேந்தி புகார்களை வீசி வருகிறார்.

    நேற்று கோவையில் நடந்த அமமுக கூட்டத்தில் டிடிவி தினகரன் குறித்து புகழேந்தி காரசாரமாக பேசினார். இதில் டிடிவி தினகரன் அவரின் ஆர்கே நகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    என்ன மோசடி

    என்ன மோசடி

    இந்த நிலையில் தற்போது புகழேந்தி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், டிடிவி தினகரன் நிறைய பண மோசடி செய்துவிட்டார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அவர் எப்படி எல்லாம் பணத்தை மோசடி செய்தார் என்று எனக்கு தெரியும்.

    ஆதாரம்

    ஆதாரம்

    சசிகலாவின் பணத்தை அவர் மோசடி செய்து ஏமாற்றிவிட்டார். அவரின் குடுமியே இப்போது என்னுடைய கையில் இருக்கிறது. அதனால் அவர் எனக்கு பயப்படுகிறார். தேவையான நேரத்தில் அவருக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுப்பேன்.

    எல்லோரும் ஏமாற்றம்

    எல்லோரும் ஏமாற்றம்

    அமமுக மூலம் அவர் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார். எங்கள் எம்எல்ஏ பதவி பறிபோனது மட்டுமே மிச்சம். தற்போது அவர் அதிமுகவையும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை அவர் விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதிமுக

    அதிமுக

    அதிமுக கட்சிக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். ஜெயலலிதாவின் கட்சி அது. அவர் கொண்டு வந்த ஆட்சி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு நாங்கள் எப்போதும் ஆபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்.

    10 நாட்கள்

    10 நாட்கள்

    ஆம் அதிமுக ஆட்சியை தக்க வைக்க, பாதுகாக்க நாங்கள் போராடுவோம். இதற்காக நாங்கள் சிப்பாயாக செயல்பட தயார். அதற்காக நான் அதிமுகவில் இணைவதாக எண்ண வேண்டாம். என்னுடைய முடிவு என்ன என்று இன்னும் 10 நாட்களில் எல்லோருக்கும் அறிவிப்பேன் என்று புகழேந்தி கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+