நான் சொன்னது நடந்துச்சு.. தனிக்கட்சி தொடங்கினால்.. ரஜினியை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் தனிக்கட்சி தொடங்கினால் ரஜினிக்கும் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை, அடையாறில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தைவான் நாட்டுக்கு திருவள்ளுவர் சிலையை அனுப்பும் விழா நடந்தது அதில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் ''டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் தனிக்கட்சி தொடங்கினால் ரஜினிக்கும் ஏற்படும்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதே கடினம். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.. டிடிவி தினகரன் கட்சி தொடங்கி 5% வாக்குகள் பெறுவார் என்றேன். அதேபோல 5% வாக்குகளை மட்டுமே டிடிவி தினகரன் பெற்றார்.
கமல்ஹாசனும் நான் சொன்னது போலவே 7% வாக்குகளைப் பெற்று இருந்தார். ஆனால் நான் ரஜினி குறித்துக் கூறவில்லை. ஆனால் பொதுவாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எல்லோர் மத்தியிலும் 'நாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்று அரசியல் ஆசை வந்துள்ளது. விரும்புபவர்கள் தாராளமாகக் கட்சி ஆரம்பியுங்கள், அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். அதே நேரத்தில் அவர்களால் 6 முதல் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறமுடியும் என்றார்.
ஒபிஎஸ் மகன் ரவீந்திராத் இந்து முன்னணி ஊர்வலத்தில் பேசியது குறித்தகேள்விக்கு, அதிமுக அனைத்து சாதி, மதத்தினருக்கான கட்சி. இதுதான் எங்களுடைய நிலை. ஓ.பி.ரவீந்திரநாத் கூறியது அவரின் கருத்தாக இருக்கலாம்'' என ஜெயக்குமார் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications