ஓட்டுக்காக மக்களை யாரும் ஏமாற்றாதீர்கள்! அப்பறம் மக்கள் உங்களை ஏமாத்திடுவாங்க! சொல்கிறார் மயில்சாமி!
சென்னை: வாக்குக்காக பொது மக்களை யாராவது ஏமாற்றினால், அவர்களை மக்கள் ஏமாற்றி விடுவார்கள் என நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். மக்களுக்கு, மொழி முக்கியமல்ல, உழைப்புதான் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மயில்சாமி, சிறிய சிறிய வேடங்களில் நடித்து, பின்னர் குணச்சித்திரம், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்ததோடு, பல்வேறு முன்னணி நடிகருடன் இணைந்து நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடிகர் மயில்சாமி இருந்த நிலையில், தற்போது அரசியல் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

நடிகர் மயில்சாமி
அதிமுகவில் தொடர்ந்து பயணித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர், அதிமுகவில் இருந்து விலகினார். எனினும், எந்தக் கட்சியிலும் அவர் தன்னை இணைத்துக்கொள்ள வில்லை. மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிங்கிய நடிகர் மயில்சாமி, 1,435 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மக்கள்
இந்நிலையில், வாக்குக்காக பொது மக்களை ஏமாற்றினால், அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் மாளிகையில் ஞானபிதா சுவாமி சிவானந்தா பரமஹம்சர் அருள் ஆசியோடு, மனமே குரு, ஜீவனே கடவுள் என்ற புத்தக வெளியீட்டு விழா நடெபற்றது. இந்த விழாவில் நடிகர் மயில்சாமி மற்றும் பின்னணி பாடகர் பிரசன்னா மற்றும் ஐயப்பன் பக்தி பாடல் புகழ் வீரமணி ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உழைப்புதான் முக்கியம்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மயில்சாமி, மக்களுக்கு மொழி முக்கியமல்ல உழைப்புதான் முக்கியம் என தெரிவித்தார். ஓட்டுக்காக மக்களை ஏமாற்றினால், மக்கள் அவர்களை ஏமாற்றி விடுவார்கள். அனைவரும் ஓட்டுக்காகத்தான் பேசுகிறார்கள். மக்களுக்காக பேசவேண்டும். மக்களுக்காக பேசி வந்தால், எம்.ஜி.ஆர். போல் மக்களால் அவர்கள் போற்றப்படுவார்கள். தவறான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவி கொடுங்கள்
பிரதமர் பதவி கொடுங்கள், நான் இந்தி பேசுகிறேன் என நகைச்சுவையுடன் கூறிய மயில்சாமி, உலகத்தில் எங்கு சென்றாலும் உழைப்புதான் முக்கியம். மொழி முக்கியமல்ல என்றார். இஸ்லாம், ஹிந்து, கிறிஸ்துவனா என 3 மதத்தையும் பிரித்து பார்க்க மாட்டேன். 3 மதத்தையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன் என நடிகர் மயில்சாமி தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications