Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு மசூதி சிஎம்டிஏ இடம் என்றால்.. சார்பதிவாளர் ஆபிஸ் கிரையம் செய்தது எப்படி? எஸ்டிபி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு பள்ளிவாசலை இடிக்கும் சிஎம்டிஏ-வின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. சிஎம்டிஏ இடம் எனில் சார்பதிவாளர் அலுவலகம் ஏன் அந்த இடத்தை பள்ளிவாசலுக்கு கிரையத்திற்கு பதிவு செய்து கொடுத்தது என்று எஸ்டிபிஐ கேள்வி எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே செக்டர் 3ல் அமைந்துள்ள 'மஸ்ஜித்-ஏ-ஹிதாயா' பள்ளிவாசல் இடமானது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான இடம் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பெற்ற தீர்ப்பின் மூலமாக, பள்ளிவாசலை இடிக்க சிஎம்டிஏ அவசர முயற்சிகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

Chennai koyambedu mosque Muslim

பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் முறையாக உரிமையாளரிடமிருந்து கிரையம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்கள் இருந்தும் சிஎம்டிஏ இந்த விவகாரத்தில் அவசரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்த பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தை, பேருந்து நிலைய பயன்பாட்டுக்காக கையகப்படுத்த சிஎம்டிஏ 2000 ஆம் ஆண்டு நில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறது.

தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகள் மூலம் நில உரிமையாளருக்கு சாதகமாக 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வருகின்றது. இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை தனது பேத்திகளுக்கு 2012 ஆம் ஆண்டு தான செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த இடத்தை மூன்று பேரிடமிருந்தும் 2019 ஆம் ஆண்டு ஹிதாயா அறக்கட்டளை மூலம் கிரையம் செய்யப்பட்டு, அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெற்று பொதுமக்கள் பங்களிப்புடன் அங்கு பள்ளிவாசல் கட்டப்பட்டு ஐந்து வேளை தொழுகை, ஜூம்ஆ தொழுகை நடைபெற்று வருகின்றது.

தான செட்டில்மெண்டும் அதன்பிறகு கிரையப் பத்திரமும் அண்ணாநகர் சார்பதிவாளர் அலுவலத்தில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த இடம் உரிமையாளர் பெயரிலேயே இருந்துள்ளது. சிஎம்டிஏ இடம் எனில் சார்பதிவாளர் அலுவலகம் ஏன் அந்த இடத்தை பள்ளிவாசலுக்கு கிரையத்திற்கு பதிவு செய்து கொடுத்தது என்கிற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், சில சமூக விரோதிகள் மூலமாக மேற்கண்ட இடம் ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி நீதிமன்றம் மூலமாக பள்ளிவாசாலை இடிக்க தடையாணை பெறப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க முறையாக சட்டப்படி நிலம் வாங்கப்பட்டு, அரசின் அனுமதி பெற்று அந்த இடத்தில் பள்ளிவாசலும் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில், அதனை இடிக்க சிஎம்டிஏ உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கின்றது. இந்த இடம் தனிநபருக்கு சொந்தமான இடம் என்பதற்கான ஆவண ஆதாரங்கள் இருந்தும் நீதிமன்றத்தில் அதனை அளிக்காமல் பாரபட்சத்துடன் சிஎம்டிஏ அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர். அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் சிஎம்டிஏ-வின் இந்த பாரபட்சமான நடவடிக்கை குறித்து முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கின்றது.

மேற்கண்ட பள்ளிவாசல் இடத்தை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் சிஎம்டிஏவால் பெறப்பட்ட இடங்களாகும். அங்கு ஏராளமான குடியிருப்புகளும் மற்ற வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. குடியிருப்பாளர்களில் பலர் சிஎம்டிஏவிடமிருந்து இழப்பீட்டை பெற்ற பின்னரும் அதனை ஒப்படைக்காமல் இருக்கும் நிலையில், உரிமையாளரால் எவ்வித இழப்பீடும் பெறப்பாடத, சி.எம்.டி.ஏவின் தேவைக்கு பயன்படாத இடத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிவாசலை மட்டும் இடிக்கும் நோக்கத்தின் பின்னணியில் சில சமூக விரோத சக்திகள் இருப்பதை அறிய முடிகின்றது.

வேறுயாருடைய இடத்தையும் காலி செய்யாத நிலையில், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலம் என்பதற்காக அதனை இடித்து காலி செய்ய சிஎம்டிஏ அவசரமாக முயற்சிப்பது ஒருவித பாரபட்ச நடவடிக்கையாகவே தெரிகின்றது. ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, மேற்கண்ட பள்ளிவாசலை இடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+