”அதிகாரத்தில் இல்லைன்னா காணாமல் போய்டுவாங்க” அண்ணாமலைக்கு முதல் பதிலடி கொடுத்த விஜய்யின் தவெக
சென்னை: அதிகாரத்தில் இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள் என்றும், அண்ணாமலை விளம்பரத்திற்காக விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார் என்றும் தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது. மேலும் "2026 தமிழக சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து எங்கள் கொள்கை எதிரியான பாஜகவுக்கும், அரசியல் எதிரியான திமுகவுக்கும் அறுசுவை உணவுடன் விருந்து வைப்பார்கள் என்று விமர்சன செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இது தான் தனது கடைசி படம் என்றும், 2026 சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்றும் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தொடர்ந்து கட்சி கொள்கை, கொடி, பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.

மேலும் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் வெளிப்படையாகவே அறிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் இதனை பேசினார். தொடர்ந்து படத்தில் நடித்துக்கொண்டே, கட்சிகளில் நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் லண்டலின் படிப்பை முடித்துவிட்டு நேற்று தமிழகம் திரும்பிய அண்ணாமலை விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றார். அதே சமயத்தில் விஜய்யும் திராவிட கொள்கையை தான் பின்பற்ற போவதாக சொல்லியிருக்கிறார் என்றும், புதிதாக எதையும் சொல்லவில்லை என்றும் விமர்சித்தார். மேலும் விஜய்யின் பேச்சும் திராவிட கட்சி கொள்கைகளோடு தான் ஒத்து போகிறது.
அரசியல் என்பது தினம் தினம் மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் விஜய் கட்சி மாநாட்டில் பேசிய பிறகு எப்போதாவது வெளியில் வந்திருக்கிறாரா? எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழக கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள், முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும். தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையை முன்வைத்து பயணிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் மதச் சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையினை முன்வைத்து பயணிக்கிறது. திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் என்ற எந்த அடையாளதிற்குள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என தலைவர் விஜய் கொள்கை பிரகடன மாநாட்டில் அறிவித்த பின்னரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியிருப்பது ஒரு விளம்பர யுத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழ்நாடு திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம்.
தமிழக மக்கள் எல்லா வகையிலான உணவையும் உண்பார்களே தவிர, ஒரு காலமும் மதவாதம் எனும் நஞ்சினை உண்ண மாட்டார்கள். ஒன்றிய ஆட்சியில் பாஜக அதிகாரத்தில் இல்லையென்றால் தமிழ் நாட்டில் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள். பன்முக தன்மை கொண்ட தேசத்தில் குறிப்பாக அதனை பெரிதும் போற்றும் தமிழக மக்கள் ஒற்றை உணவு போல "ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு" போன்ற திட்டமிடப்பட்ட பன்முக சிதைவுகளை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்கள்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து அறுசுவை உணவுடன் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவிற்கும் அரசியல் எதிரியான திமுகவிற்கும் விருந்து வைப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications