"கைகட்டி வேடிக்கை பார்ப்போம்னு நினைச்சீங்களா? NDA கூட்டணிக்கு ஜீரோவை திருப்பி கொடுப்போம்” - ஸ்டாலின்
சென்னை: பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு "ஜீரோ"-வை திருப்ப கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்க மறுப்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, குடிநீர் இணைப்பு நிதி எதையும் விடுவிக்காதது, ரயில்வே உள்ளிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் அனுமதி மறுப்பு, உரிய வரி பங்கீடு தராமை என தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறக்கணித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்தும், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்கவும், ரயில்வே உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட கோரியும் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "பட்ஜெட்டில் "ஜீரோ" கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு "ஜீரோ"-வைத் திருப்பியளிப்போம்! #TamilNaduVsNDA எனும் இந்த ஜனநாயகப் போரில் #தமிழ்நாடு_தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!" எனத் தெரிவித்துள்ளார்.
-
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்












Click it and Unblock the Notifications