ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க! இண்டேன் கேஸ் இணைப்பு வீட்டிற்கே வரும்.. அதற்கு என்ன செய்யணும்?
சென்னை: ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் புதிய எல்பிஜி சிலிண்டர் இணைப்பு உங்கள் வீடு தேடி வரும். இந்த விஷயம் தெரியுமா?
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் எரிவாயு இணைப்பு பெற அலுவலகத்திற்கு சென்று அங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறகு அவர்கள் கேட்கும் ஆவணங்களை எல்லாம் ஒரிஜினலை காட்டி ஜெராக்ஸை சமர்ப்பித்து பிறகு சில தினங்கள் கழித்து சென்றால் அவர்கள் கேஸ் புத்தகத்தையும் ரெகுலேட்டரையும் தருவார்கள்.

கூடவே சிலிண்டரும் வந்துவிடும். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களுக்கு சிலிண்டரை போன் மூலம் புக் செய்யலாம். இப்படித்தான் இந்த நடைமுறை இருந்தது. ஆனால் தற்போது இது எளிமையாகியுள்ளது.
ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். வீடு தேடி புதிய சிலிண்டர் இணைப்பு வரும். இதற்கு 8454955555 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும். இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். மிஸ்டு கால் கொடுத்த பிறகு உங்கள் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஓபன் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதன் பிறகு விநியோகஸ்தர் உங்களை தொடர்பு கொள்வார். தற்போது இண்டேன் வாடிக்கையாளர்களும் தங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து ரீஃபில் புக் செய்யலாம் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நீங்கள் இந்திய ஆயில் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்களையும் இணைக்க வேண்டும். இந்த வசதி கடந்த 2015 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.
இந்த வசதி இந்தியா முழுவதும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சிலிண்டரின் எண்ணிக்கை, பிரஷர் ரெகுலேட்டரின் விவரங்கள் அடங்கிய ஆவணம் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எந்த வித சிரமமும் இன்றி புதிய சிலிண்டர் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications