விரைவில் போர் வரும்.. போரை மட்டும் தவிர்த்தால்.. அடுத்து பெருந்தொற்றுதான்.. எச்சரிக்கும் பில் கேட்ஸ்
சென்னை: உலகில் பரவப்போகும் எதிர்கால பெருந்தொற்று அல்லது உலகப்போர் குறித்து கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோடீஸ்வரர் பில் கேட்ஸ் கடந்த இரண்டு பல வருடங்களாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். "காலநிலை பேரழிவுகள்" முதல் "சைபர் தாக்குதல்கள்" வரை மக்களை அச்சுறுத்தும் பல பிரச்சினைகள் குறித்து பொதுமக்களை எச்சரித்து வருகிறார். கொரோனாவிற்கு முன்பே கொரோனா போன்ற பேண்டமிக் குறித்து எச்சரிக்கைகளை விடுத்தது இருந்தார்.

எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம்.. ஒருவருக்கு எபோலா வந்தால் அவர் உடனே அறிகுறிகளை வெளிப்படுத்துவார். அவரால் எங்கும் செல்ல முடியாது. இதனால் எபோலா பரவும் வேகம் குறைந்தது. இதனால் அந்த வைரஸ் பல நாடுகளில் பரவவில்லை. பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்தது இப்படித்தான்.
ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். இன்னொரு முறை வேறு வைரஸ் இப்படி உருவானால், அதில் இருந்து தப்பிக்க முடியாது, என்று உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். கொரோனாவிற்கு முன் அவர் விடுத்த இந்த எச்சரிக்கை பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
இன்னொரு புதிய வைரஸ் உருவானால் நாம் அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். அது நம்மை தாக்குவது கூட நமக்கு தெரியாது. நாம் வைரஸோடு பயணம் செய்வோம். மிக நன்றாக, அறிகுறி இல்லாமல் இருப்போம். பல நாடுகளுக்கு வைரஸோடு விமானத்தில் செல்வோம். வைரஸ் இதனால் பலருக்கும் பரவும். அப்படி ஒரு வைரஸ் நம்மை தாக்கினால், உலகம் பெரிய அழிவை சந்திக்கும் என்று பில் கேட்ஸ் குறிப்பிட்டு இருந்தார். 2015ல் பில்கேட்ஸ் வைரஸ் தாக்குதல்கள் குறித்து டெட் டாக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது இது. கொரோனா காலத்தில் அவரின் இந்த பேச்சு டிரெண்டானது .
எச்சரிக்கை: உலகில் பரவப்போகும் எதிர்கால பெருந்தொற்று அல்லது உலகப்போர் குறித்து கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்போது உலகம் முழுக்க மக்கள் இடையே அழுத்தம் நிலவி வருகிறது. தற்போது உலகில் மக்கள் நல்ல மனநிலையில் இல்லை. தலைவர்கள் இடையே கடுமையான அழுத்தம் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து ஒரு பெரிய போரை உருவாகும். பெரிய போர் கண்டிப்பாக உருவாகும். நாம் ஒருவேளை போர் வருவதை தடுத்தால் கண்டிப்பாக ஒரு பெருந்தொற்று வரும்.
அடுத்த 25 வருடங்களுக்குள் ஒன்று போர் வரும். அல்லது பெரிய பெருந்தொற்று வரும். அடுத்த 25 வருடங்களுக்குள் இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இதை தடுக்க முடியாது. தொற்றுநோய்கள் காலப்போக்கில் ஏற்படக்கூடியவை. தவிர்க்க முடியாதவை. காலநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி போன்ற காரணிகளால் அவை மிகவும் பொதுவானதாகி வருகின்றன. இதனால் நாம் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
தற்போது உலகில் மக்கள் நல்ல மனநிலையில் இல்லை. தலைவர்கள் இடையே கடுமையான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் கண்டிப்பாக போருக்கு வித்திடும். அப்படி போர் நடக்கவில்லை என்றால் நமக்கு இடையே பெருந்தொற்று ஏற்படும், என்று கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications