சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீன் சாப்ட்டா கண்ணு நல்லா தெரியும்.. நான் 55 வயசுலதான் கண்ணாடி போட்டேன்.. சட்டசபையில் அமைச்சர் கலகல!

Google Oneindia Tamil News

சென்னை: மீன் சாப்பிட்டால் கண்ணுக்கும் இதயத்துக்கும் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் கலகலப்பான தொனியில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான கூட்டம் கடந்த 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று மூன்றாம் நாளாக தமிழக சட்ட சபை கூட்டம் நடைபெறுகிறது.

கழுதை மீது ஏற்றிச்செல்லப்பட்ட பொங்கல் பரிசு.. தீராத மலை மக்களின் கோரிக்கை!கழுதை மீது ஏற்றிச்செல்லப்பட்ட பொங்கல் பரிசு.. தீராத மலை மக்களின் கோரிக்கை!

கண் நன்றாக தெரியும்

கண் நன்றாக தெரியும்

இதன் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறனின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர்
மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும். நான் 55 வயதில் தான் கண்ணாடி அணிந்தேன் என்றார்.

புற்றுநோய் வராது

புற்றுநோய் வராது

மேலும் மீன் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது. புற்றுநோய், கண்பார்வை கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்.

மீன் வளர்த்தால்

மீன் வளர்த்தால்

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் டன் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்புத் தொழில் செய்தால் பத்து மாதங்களில் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

அரசு பணிக்கு ஆசைப்படாமல்

அரசு பணிக்கு ஆசைப்படாமல்

மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. இளைஞர்கள் படித்து முடித்ததும் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

English summary
Minsiter Jayakumar says if we eat fish we will never have eye problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X