உங்க சம்பளம் இந்த பிராக்கெட்டில் இருந்தால்! கண்ணை மூடிக்கிட்டு.. பழைய வருமான வரியை தேர்வு செய்யுங்க
சென்னை: புதிய வருமான வரி ஸ்லாபில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் பழைய வருமான வரி regime இன்னும் பலருக்கு லாபம் தரக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் மாதம் 1.20 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள்.. அதாவது வருடத்திற்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் பழைய வருமான வரி regime ஐ தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். ஏன் என்று இங்கே விளக்கம் தரப்பட்டு உள்ளது.
பழைய வரி முறையில் உள்ள விலக்குகள்:
நிலையான விலக்கு: ரூ 50,000
பிரிவு 80C விலக்கு(அதிகபட்சம்): ரூ 1,50,000
பிரிவு 80D விலக்கு (அதிகபட்சம்): ரூ. 75,000
வீட்டுக் கடன் வட்டி (பிரிவு 24B): ரூ. 2,00,000
கூடுதல் NPS விலக்கு (80CCD(1B)): ரூ. 50,000
மொத்த விலக்குகள்: ரூ 5.25 லட்சம்

HRA விலக்கு: ரூ. 3 லட்சம் (ஒரு மாதத்திற்கு ரூ. 25,000 HRA என்ற அடிப்படையில் ரூ. 50,000 அடிப்படைச் சம்பளமாகப் பெறும் நபர்)
மொத்த சம்பளம்: ரூ 15,00,000
மொத்த விலக்குகள் (ரூ 5.25 லட்சம் + ரூ 3 லட்சம் ஹெச்ஆர்ஏ): ரூ 8.25 லட்சம்
அப்படி என்றால் நிகர வரிவிதிப்பு வருமானம்: ரூ 6.75 லட்சம்
எனவே பழைய regime கீழ் செலுத்த வேண்டிய வரி:
ரூ 0 - 2.5 லட்சம்: ரூ 0
ரூ 2.5 லட்சம் - 5 லட்சம் 5%: ரூ 12,500
ரூ 5 லட்சம் - 6.75 லட்சம் 20%: ரூ 35,000
மொத்த வரி: ரூ 47,500
செஸ் (4%): ரூ 1,900
பழைய regime கீழ் மொத்தமாக செலுத்த வேண்டிய இறுதி வரி : ரூ 49,400
2. அதுவே புதிய regime கீழ் வரி கணக்கீடு (சம்பளம் ரூ. 15 லட்சம்)
இதன் ஸ்லாப் பின்வருமாறு
ரூ 0 - 4 லட்சம்: 0%
ரூ 4 லட்சம் - 8 லட்சம்: 5%
ரூ 8 லட்சம் - 12 லட்சம்: 10%
ரூ 12 லட்சம் - 16 லட்சம்: 15%
ரூ 16 லட்சம் - 20 லட்சம்: 20%
ரூ 20 லட்சம் - 24 லட்சம்: 25%
24 லட்சத்திற்கு மேல் - 30%
நிலையான விலக்கு: ரூ. 75,000 (கழிவு மட்டுமே அனுமதிக்கப்படும்)
வரி விதிக்கக்கூடிய வருமான கணக்கீடு:
மொத்த சம்பளம்: ரூ 15,00,000
குறைவான நிலையான விலக்கு: ரூ 75,000
நிகர வரிவிதிப்பு வருமானம்: ரூ 14,25,000
புதிய regime கீழ் செலுத்த வேண்டிய வரி:
ரூ 0 - 4 லட்சம்: ரூ 0
ரூ 4 லட்சம் - 8 லட்சம் 5%: ரூ 20,000
ரூ 8 லட்சம் - 12 லட்சம் 10%: ரூ 40,000
ரூ 12 லட்சம் - 14.25 லட்சம் 15%: ரூ 33,750
மொத்த வரி: ரூ 93,750
செஸ் (4%): ரூ 3,750
புதிய regime கீழ் மொத்தமாக செலுத்த வேண்டிய இறுதி வரி: ரூ 97,500
எனவே இவர்கள் பழைய regime ஐ தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications