நீங்கள் இந்த லிஸ்டில் இருந்தால்.. கண்ணை மூடிக்கொண்டு.. புதிய வருமான வரி முறையை தேர்வு செய்யுங்க!
சென்னை: பட்ஜெட்டிற்கு பின் புதிய வருமான வரி பிரிவிற்கு மாறலாமா.. வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். அப்படிப்பட்ட சந்தேகம் ஏற்படுபவர்கள் கீழ்கண்ட லிஸ்டில் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு புதிய வருமான வரி முறையை தேர்வு செய்யலாம்.
1. நீங்கள் 12.75 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருட வருமானம் ஈட்டினால் நீங்கள் கண்டிப்பாக புதிய முறையை தேர்வு செய்வதே சரியானது.

2. நீங்கள் பெரிதாக முதலீடுகள் எதையும் செய்யவில்லை.. அதாவது முதலீடுகள் செய்தால் அதை கணக்கு காட்டி வரி விலக்குகளை பெற முடியும். அப்படி முதலீடு செய்யவில்லை என்றால் புதிய முறையை தேர்வு செய்வதே சரியானது.
3. உங்களுக்கு வீட்டு லோன் இல்லாத பட்சத்தில் அதை கணக்கு காட்டி வரி விலக்குகளை பெற முடியாத சூழல் ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழலில் புதிய முறையை தேர்வு செய்வதே சரியானது.
4. உங்களின் வருமானம் 12.75 லட்சத்திற்கும் மேல் இருந்தும் கூட நீங்கள் பெரிதாக முதலீடுகள் எதையும் செய்யவில்லை என்றால் புதிய முறையை தேர்வு செய்வதே சரியானது.
5. நீங்கள் முதலீடுகள் நிறைய செய்தும் கூட.. நீங்கள் 12.75 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருட வருமானம் ஈட்டினால் நீங்கள் கண்டிப்பாக புதிய முறையை தேர்வு செய்வதே சரியானது.
வருமான வரி பிரிவுகள்:
புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலையான கழிவு 75 ஆயிரம் வரும். இதன் மூலம் 12.75 லட்சம் வரை வரி கிடையாது. இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.
புதிய வருமான வரி முறை: புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.
அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.
அதுவே நீங்கள் 13லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்.. அதாவது உங்களின் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது
உங்களின் முதல்
0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 லட்சம் ரூபாய் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 லட்சம் ரூபாய் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications