என் பெயரை கூகுளில் தேடுங்க.. சிக்கன் கடை நடத்தும் சென்னை பிச்எடி மாணவரால் வியந்த அமெரிக்க விலாக்கர்
சென்னை: பிஎச்டி படித்தபடியே இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் சென்னையில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்த இளைஞரிடம் சிக்கன் 65 சாப்பிட்ட அமெரிக்க ‛விலாக்கரை' அந்த இளைஞர் வியக்க வைத்தார். மேலும் கூகுளில் அவரது ஆராய்ச்சி கட்டுரையை தேடச்சொல்லி சர்ப்பிரைஸ் கொடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வரகிறது.
இந்தியாவில் ஒரு பக்கம் வேலைவாய்ப்பு சரியாக உருவாக்கப்படவில்லை. இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதேவேளையில் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் ‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்களின் எண்ணிக்கை என்பது நம் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க ‛ஸ்டார்ட்அப்' தொடங்க முடியாத பலரும் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறிய அளவில் தொடங்கி செய்ய தொடங்கியுள்ளனர்.அந்த வகையில் பலரும் தாங்கள் படித்த படிப்புக்கு வேலை இல்லாத காரணத்தால் டீக்கடை, பானிப்பூரி, ஹோட்டல், துரித உணவகம் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
எம்பிஏ படித்தவர் டீக்கடை வைத்திருப்பதாகவும், பிடெக் படித்தவர் பானிபூரி கடை நடத்துவதாகவும் கூறிய வீடியோக்கள் இணையதளத்தில் அதிகமாக பரவி பாராட்டுகளை குவித்தது. இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பயோ டெக்னாலஜியில் பிஎச்டி படித்து கொண்டே தள்ளுவண்டியில் துரித உணவகம் (Fast Food) நடத்தி வரும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் லீவிஸ் தமிழ்நாட்டில் சுற்றுலா வந்தார். இவர் சென்னையில் பல இடங்களை சுற்றி பார்த்தார். அப்போது Vlogger என்பதால் தான் செல்லும் இடம் மற்றும் சந்திக்கும் நபர்களை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கிறிஸ்டோபர் லீவிஸ் சென்னையில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவில் கிறிஸ்டோபர் லீவிஸ் தள்ளுவண்டியில் செயல்படும் துரித உணவகத்துக்கு செல்கிறார். அங்கு இளைஞர் நிற்கிறார். அவரிடம் கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛ஹாய் ப்ரோ, எப்படி இருக்கிறீர்கள்.. சிக்கன் 65 ஒரு பிளேட் எவ்வளவு?'' என கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர், ‛‛நான் நன்றாக இருக்கிறேன். 100 கிராம் சிக்கன் ரூ.50 ஆகும்'' என பதிலளிக்கிறார்.
இதையடுத்து கிறிஸ்டோபர் லீவிஸ், ‛‛எனக்கு 100 கிராம் சிக்கன் தாருங்கள் ப்ரதர்.. உங்களின் கடையை கூகுள் மேப் மூலம் அறிந்து கொண்டு வந்தேன்'' எனக்கூறினார். அதன்பிறகு அவர் இளைஞரிடம் பேசியபோது தான் அவரது கல்வி தகுதி பற்றி அறிந்து கிறிஸ்டோபர் லீவிஸ் மகிழ்ச்சியடைந்தார். அதாவது அந்த இளைஞர், ‛‛நான் இந்த வேலையுடன் பிஎச்டி படித்து வருகிறேன். பயோ டெக்னாலஜி பிரிவில் பிஎச்டி படித்து வருகிறேன். கூகுளில் என்னை பற்றி தேடிப்பாருங்கள்'' என கூறுகிறார்.
அப்போது குறுக்கிட்ட கிறிஸ்டோபர் லீவிஸ்,‛‛கூகுளில் தேடினால் உங்களின் கடை கிடைக்கும் அப்படித்தானே?'' என்கிறார். அதனை கேட்டு சிரித்த அந்த இளைஞர், ‛‛இல்லை.. இல்லை.. கூகுளில் தேடினால் எனது ஆராய்ச்சி தொடர்பான ஆர்ட்டிக்கிள் கிடைக்கும்'' என்று கூறுகிறார். அதனை கேட்டு வியந்த கிறிஸ்டோபர் லீவிஸ் ‛‛ஓ.. சூப்பர்'' எனக்கூறி ஆர்ட்டிக்கிளை கூகுளில் தேட சொல்கிறார்.
இதையடுத்து அந்த இளைஞர், ‛‛Tarul Rayan SRM University" என டைப் செய்து காண்பிக்க அவரது பிஎச்டி ஆராய்ச்சி தொடர்பான ஆர்ட்டிக்கிள் என்பது அதில் வருகிறது. அதனை பார்த்து கிறிஸ்டோபர் லீவிஸ் மகிழ்ந்தார். அதன்பிறகு அவர் சாப்பிட்ட சிக்கன் 65யை தாண்டி அந்த இளைஞருக்கு கூடுதலாக பணத்தை கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனை பார்க்கும் பலரும் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications