இனி வாகன இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் பெட்ரோல் – டீசல் கிடையாது? மத்திய அரசு தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாலை பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு ஒவ்வொரு வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் உள்ளதா? என்பதை பெட்ரோல் நிலையங்களில் பரிசோதித்த பிறகு தான் பெட்ரோல் - டீசல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முக்கிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இதனை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் தொடர்பான வழக்குகள் ஏராளமாக உச்சநீதிமன்றங்களில் பெண்டிங்கில் உள்ளன. இந்த வழக்குகளில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. இதனால் உச்சநீதிமன்றம் சில முக்கிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியது.

insurance vehicle petrol diesel

அதன்படி சாலைகளில் வாகனங்களை சோதனையிடும்போது இன்சூரன்ஸ் விவரங்களை உடனடியாக சரிபார்க்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு பிரத்யேக செயலி அல்லது கையடக்க கருவிகள் வழங்க வேண்டும்.

புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு Third Party இன்சூரன்ஸ் காலத்தை நீட்டிக்க வேண்டும். தற்போது 3 ஆண்டுகளாக உள்ள காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கான காலஅவகாசம் 4 ஆண்டில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்சூரன்ஸ் இன்றி இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி முக்கிய பரிந்துரை என்னவென்றால் ஒவ்வொரு வாகனங்களும் இன்சூரன்ஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை பெட்ரோல் பல்க்குகளில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(IRDAI) மற்றும் சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில் இந்த பரிந்துரைகளை செயல்படுத்த உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த இந்த நடவடிக்கையை மத்திய அரசு அதிகாரிகள் செயல்படுத்த தயாராகி வருகின்றனர்.

பெட்ரோல் பல்க்குகளில் பெட்ரோல் - டீசல் நிரப்பும் சேவையை பாதிக்காத வகையில் வாகனங்களின் இன்சூரன்ஸ் இருப்பதை உறுதி செய்து எரிபொருள் நிரப்ப நடவடிக்கை எடுப்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள் உள்பட பிற சாலைகளில் உள்ள ANPR கேமராக்களை வாகன தரவுத்தளம் மற்றும் காப்பீட்டுத் டேட்டா தளங்களுடன் இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வாகனங்களில் முழு விவரங்கள் நொடிப்பொழுதில் அறிந்து கொள்ள முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் முதற்கட்டமாக, பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இருப்பதை உறுதி செய்வது, ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் வாகன பதிவெண் பலகையை ஸ்கேன் செய்து இன்சூரன்ஸை சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது. இன்சூரன்ஸ் பெற்ற பிறகே அந்த வாகனங்களால் பெட்ரோல், டீசல் நிரப்ப முடியும்.

மேலும் முதற்கட்டமாக இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வராமல் குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தவும், அதன்பிறகு நாடு முழுவதும் செயல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த பரிந்துரைகளின் முக்கிய நோக்கம் என்பது இன்சூரன்ஸ் இன்றி இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, சாலை பாதுகாப்பை உறுதி சரிசெய்வது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+