சென்னை மக்களே..குழந்தைகளை பள்ளிக்கு விட போறீங்களா.. இப்படியும் நடக்குது.. அபராதம் வீடு தேடி வரலாம்!
சென்னை: சென்னையில் பள்ளி குழந்தைகளை காலையில் அசர அவசரமாக ஹெல்மெட் அணியாமல் அழைத்து செல்கிறார்களா, உங்களுக்கு அபராதம் வீடு தேடி வரும். பாவம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்ற அம்மாவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின் போது அபராதம் விதிப்பது ஒருபுறம் தீவிரமாக நடக்கிறது.மறுபுறம் ட்விட்டரில் பொதுமக்கள் அனுப்பும் விதிமீறல் புகைப்படங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும்50க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. அப்படி வரும் புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்கள். புகைப்படத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அபராதம் கண்டிப்பாக விதிக்கப்படுகிறது.
அதாவது சென்னையில் உள்ள யார் வேண்டுமானாலும் கண்முன்னே யாராவது போக்குவரத்து விதிகளை மீறினால், உடனே புகைப்படம் அல்லது வீடியோ எடுங்கள். அதனை உங்கள் ட்விட்டரில்இருந்து சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கலாம்.
அதற்கு நீங்கள் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ உடன், எந்த இடம், நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அப்படி செய்தால் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அவர்களின் விதிமீறலுக்கு தகுந்தாற்போல் அபராதம் விதிப்பார்கள். அதற்கான சலானை ட்விட்டரில் உங்களுக்கு பதிலாக பதிவிடுவார்கள். இதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும்.
அப்படித்தான் சென்னையில் ஒரு தாய் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். ஹெல்மட் அணியவில்லை. அவரது குழந்தைகளையும் ஹெல்மெட் அணியவில்லை.இந்நிலையில் ஹெல்மட் அணியாமல் விதிமீறி செல்வதாக காரில் இருந்து அமர்ந்தபடி சிதீஸ் என்பவர் அதை புகைப்படம் எடுத்துள்ளார்.
Four persons on bike . No helmet
— SIDHESH (@sidheshv) July 11, 2023
At 8:24 am today . Right infront to GRUNDFOS Corp office . @ChennaiTraffic pic.twitter.com/WvvGzNIA5m
அந்த புகைப்படத்தை எடுத்த சிதீஸ், 4 பேர் ஒரே வாகனத்தில் செல்வதாக ட்விட்டரில் சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்தார்.இதையடுத்து போலீசார் அந்த வாகனத்திற்கு ஹெல்மட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
எனவே ஹெல்மட் அணியாமல் உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு போக வேண்டாம்.அப்படி சென்றால் உங்களுக்கு அபராதம் வீடு தேடி வரலாம். உங்களையும் யாராவது புகைப்படம் எடுத்து சென்னை போலீசில் புகார் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. உஷாராக இருங்க மக்களே..












Click it and Unblock the Notifications