பால் பாக்கெட் கவரை திரும்ப கொடுத்தால் காசு.. ஆவின் அறிவிப்பு.. குப்பையில் வீசுவதை தடுக்க திட்டம்
சென்னை: ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் பாலினை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி பாக்கெட் கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் நிர்வாகம் இல்லாத பட்சத்தில் காலி பால் பாக்கெட் கவர்களை எங்கு கொண்டு கொடுப்பது என்று தெரியாமல் பொதுமக்கள் குப்பைகளில் வீசி விடுகின்றனர். எனவே ஆவின் நிறுவனத்தைப் போன்று காலி பால் பாக்கெட் கவர்களை பொதுமக்களிடம் இருந்து வாங்குவதற்கு தனியார் பால் நிறுவனங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3300 என்ற கட்டணமில்ல தொலைபேசி எண், துணை பொது மேலாளர் ( வடக்கு ) 94442 47327, துணை பொது மேலாளர் (மத்தியம்), 73585 00929, உதவி பொது மேலாளர் (தெற்கு ) 97907 73955 உள்ளிட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications