போஸ்ட் ஆபீஸில் மாதம் ₹2,200 சேமித்தால் என்னாகும் தெரியுமா? 5 ஆண்டில் கிடைக்கும் தொகை ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள்தான்.. வங்கி டெபாசிட்களை விடப் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் மிகக் குறைவு என்பதாலும், மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதாலும் மக்கள் இதில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு நிதி (Recurring Deposit - RD) திட்டம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது..

போஸ்ட் ஆபீஸின் தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால், உங்கள் முதலீட்டிற்கு 100% பாதுகாப்பு உண்டு.. சந்தை மாற்றங்களால் உங்கள் பணம் ஒருபோதும் குறையாது..

Post Office

குறைந்தபட்ச முதலீடு மற்றும் நெகிழ்வுத்தன்மை: மாதம் வெறும் 100 ரூபாய் முதற்கொண்டே யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம்; மேலும் ஒருவர் எத்தனை ஆர்.டி கணக்குகளை வேண்டுமானாலும் தபால் நிலையத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது..

அவசர கால கடன் வசதி: உங்கள் கணக்கைத் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த பிறகு, அதில் உள்ள மொத்தத் தொகையில் 50% வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்; இது எதிர்பாராத மருத்துவ அல்லது குடும்பச் செலவுகளுக்கு பெரிதும் உதவும்..

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டம்

தற்போதைய கணக்கீட்டின்படி, ஒரு நபர் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டத்தில் மாதம் 2,200 ரூபாய் வீதம் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், அதன் முதிர்வு காலத்தில் அவருக்கு கிடைக்கும் தொகை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்தத் தொகை 1,32,000 ரூபாயாக இருக்கும்.

ஆனால், அஞ்சலகம் வழங்கும் தற்போதைய வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் முடிவில் உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை தோராயமாக 1,55,000 ரூபாய் முதல் 1,57,000 ரூபாய் வரை இருக்கலாம்.

25,004 ரூபாய் வெறும் வட்டி

ஆண்டுகள் முடிவில் உங்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை தோராயமாக 1,57,004 ரூபாயாக இருக்கும்.. அதாவது, நீங்கள் முதலீடு செய்த அசலைத் தாண்டி சுமார் 25,004 ரூபாய் வெறும் வட்டியாக மட்டுமே உங்களுக்குக் கிடைக்கிறது.. ஒரு சிறு சேமிப்பு எப்படி ஒரு பெரிய நிதியாதாரமாக மாறுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்..

போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி திட்டத்தில் இணைவது மிகவும் எளிதானது.. நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலும் வெறும் 100 ரூபாய் முதற்கொண்டே இந்தக் கணக்கைத் தொடங்கலாம்..

ஒருமுறை கணக்கைத் தொடங்கிவிட்டால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிர்ணயித்த தேதியில் பணத்தைச் செலுத்தி வர வேண்டும்.. நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணம் செலுத்தத் தவறினால் கணக்கு செயலிழக்க வாய்ப்புள்ளது என்பதால், ஆன்லைன் பேங்கிங் அல்லது ஆட்டோ-டெபிட் வசதியைப் பயன்படுத்துவது சிறந்தது.. மேலும், ஒரு நபர் எத்தனை ஆர்.டி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பது இதில் உள்ள கூடுதல் சிறப்பாகும்..

RD தபால் சேமிப்பு திட்டத்தில் கடன், வட்டி சலுகைகள்

இந்தத் திட்டத்தில் உள்ள இன்னொரு முக்கிய வசதி என்னவென்றால், அவசரத் தேவைகளுக்காக உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.. அதேபோல், 3 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு இந்தக் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.. ஆனால், 5 ஆண்டுகள் முழுமையாக முடிக்கும்போதுதான் உங்களுக்கு முழுமையான வட்டிப் பயன்கள் கிடைக்கும்.

பணவீக்கம் அதிகரித்து வரும் இக்காலத்தில், வீண் செலவுகளைக் குறைத்து மாதம் 2,200 ரூபாயை சேமிப்பது என்பது உங்கள் எதிர்காலத் தேவைகளான குழந்தைகளின் கல்வி அல்லது சிறு தொழில் தொடங்க ஒரு ஊக்கத்தொகையாக அமையும்..

மத்திய அரசு சபாஷ்

மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் திட்டம் என்பதால், உங்கள் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.. வங்கிகளின் வட்டி விகிதங்கள் அடிக்கடி மாறினாலும், போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ஓரளவுக்கு நிலையான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

அதனால் ஒரு சிறிய தொகையை சேமித்து 5 ஆண்டுகளில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக பெற விரும்புவோர் இப்போதே தபால் நிலையத்தை அணுகலாம்.. இந்தத் தகவலைச் சிறுகச் சிறுகச் சேமிக்க விரும்பும் உங்கள் நண்பர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பகிருங்கள்.. அவர்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+