நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்றால்.. அமைச்சராக்கினால் ஏன் கதறல்?.. திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று முதல்வர் விஜய் பேசினார். அப்போது மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என்று கூட்டணிக் கட்சியினரை கூறுகின்றனர். அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகின்றனர் என்று முதல்வர் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், திமுகவின் கடந்த கால ஆட்சியை டாஸ்மாக் பார்ட்டி பண்ட் என்று முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் விஜய் பேசுகையில், டாஸ்மாக் மாதிரியே பல துறைகளில் கட்சி நிதி என்ற பெயரில் அடிக்கப்பட்ட கொள்ளையை ஒவ்வொன்றாக அரசின் கஜானாவுக்குள் கொண்டு சேர்த்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை தொட மாட்டோம். தொடவும் விடமாட்டோம். இதற்கு முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்.

if-you-sent-them-here-why-cry-when-they-become-ministers-vijay-slams-dmk

ஒவ்வொரு ஊழலாக இனி வெளிவரும். ஒவ்வொரு வேஷமாக இனி கலையும். இங்குள்ள நிறைய பேர் நடுங்கிப்போயுள்ளனர். இதில், நம் மேல் அவதூறு வேறு பரப்புகின்றனர். திமுகவின் தயவால் இந்த ஆட்சி நடக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மனசாட்சி உள்ள சக்திகளின் ஆதரவால் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என்று கூட்டணிக் கட்சியினரை கூறுகின்றனர். அப்படி அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுகின்றனர். ஏன் இவ்வளவு கோபம். ஏன் இவ்வளவு கதறல்ஸ். மார்க்சிஸ் கட்சி நமக்கு கொடுத்த ஆதரவு சுயேச்சையாக எடுத்த முடிவென்று கூறிகின்றனர். அதேபோல, இந்திய கம்யூனிஸ் கட்சி நம் அரசுக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையாக எடுத்த முடிவென்று கூறுகின்றனர்.

இதில் நாங்கள் தான் அனுப்பிவைத்தோம் என்று கூறிக் கொண்டிருப்பது என்ன அர்த்தம். மக்களுக்கு இது நன்றாகவே புரியும். அவர்கள் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினார். அப்போது, முதல்வர் பேச பேசவே திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+