New Regime vs Old Regime: வருமான வரியில் புதுசுக்கு போய்டா பழசுக்கு வாழ்நாளில் மாற முடியாது.. ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் ஒரு முறை புதிய முறைக்கு ( New Regime) க்கு மாறினால், மறுபடியும் பழைய முறைக்கு (Old Regime) க்கு வாழ்நாள் முழுவதும் திரும்ப முடியாது என பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி அண்மையில் வெளியிட்டிருந்த பதிவில், "வருமான வரி செலுத்துவோர் ( வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்வோர்) கவனத்திற்கு: பழைய முறை மற்றும் புதிய முறை வருமான வரி தாக்கல்கள் செய்கிறீர்களா.. கீழ்கண்ட பதிவு ITR4 படிவம் மூலம் வரி தாக்கல் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் பழைய முறையை ( Old Regime) தேர்வு செய்திருந்தால், இந்த வருடம் வரி தாக்கல் செய்கையில், கூடுதலாக செய்ய வேண்டியது என்ன?

 If you switch to the new Regime of income tax, you cannot go back to the old Regime


மூன்று வருடங்களுக்கு முன்னர், புதிய முறை (New Regime) அறிமுகப் படுத்தப் பட்டது. பழைய வரி முறையை Old Regime என்று அழைத்தோம். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்கிற முழு சுதந்திரம், வரி செலுத்துவோருக்கு இருந்தது.

அதற்கு அடுத்த பட்ஜெட்டில், புதிய முறையை (New Regime ஐ ) default ஆக மாற்றி, அதற்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டது. உங்கள் அலுவலக அமைப்பில், New Regime ஐ default ஆக கொண்டு வந்து, அதை நீங்கள் மாற்றினீர்கள். அப்படி மாறவில்லையென்றால், ITR file செய்கையில் மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது (ஒரே ஒரு செலக்ஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருந்தது).

 If you switch to the new Regime of income tax, you cannot go back to the old Regime


நடப்பு நிதியாண்டு முதல், உங்களுக்கு New Regime ஐ default ஆக ஆக்கப்பட்டு, ITR file செய்கையில் நீங்கள் Old Regime க்கு மாற வேண்டுமானால், Form 10-IEA என்கிற படிவத்தை ஜூலை 31 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.அப்படி குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், உங்கள் அலுவலகத்தில் நீங்கள் Old Regime தேர்வு செய்து, அதற்கான ஆவணங்களை நீங்கள் கொடுத்திருந்தாலும், உங்களது Regime ஐ, New Regime ஆக கருதி, அதற்கேற்றவாறு வரி கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யபடும். அந்த கணக்கீட்டில், அதிக வரி வந்தால், நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.

இந்த செயல்முறை, தனிநபர்களுக்கு (ITR1/ITR2/ITR3) பொருந்துமா என்கிற தகவலை, வருமான வரி ஆணையம் தெளிவு படுத்தவில்லை. ஆகையால், தற்போதைக்கு, பொருந்தாது என்றே வைத்துக் கொள்ளலாம்.

என்னென்ன தகவல்கள் அந்த Form 10-IEA படிவத்தில் கேட்கப்படும்? : PAN, assessment year, and Current residential status. இது மட்டுமல்லாது, எத்தனை முறை அவர்கள் ஒரு regime ல் இருந்து இன்னொன்றுக்கு மாறினார்கள், எந்த தேதியில் மாறினார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு முறை New Regime க்கு மாறினால், மறுபடியும் Old Regime க்கு வாழ்நாள் முழுவதும் திரும்ப முடியாது.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தாக்கல் செய்யுங்கள்... New Regime க்கு மாறவே மாறாதீர்கள்... குறுகிய காலத்தில் New Regime ல் சேமிப்பதாக நினைத்துக் கொண்டு, வரும் காலங்களில் உங்கள் வியாபாரம்/தொழில் விரிவடைந்தால், அதிக வரி செலுத்த நேரிடும்" இவ்வாறு பொருளாதார நிபுணர் ராஜேஸ் கிருஷ்ண மூர்த்தி என்று கூறியிருந்தார்..

பொருளாதார நிபுணர் ராஜேஸ் கிருஷ்ண மூர்த்தி கூறிய படி, புதிய முறையை பொறுத்தவரை ஓரளவு வருமானம் உள்ளவர்கள் அதாவது 7.25 லட்சம் வரை வருமானத்திற்குள் உள்ளவரை வருமான வரியில் இருந்து தப்பிக்க முடியும். ஆனால் அந்த தொகையைவிட அதிகரித்துவிட்டால் கண்டிப்பாக வருமான வரியாக கணிசமான தொகையை கட்டியாகவே வேண்டிய நிலை ஏற்படும். வருமான வரியை சேமிக்க விரும்புவோருக்கு பழைய வருமான வரியை முறையே சிறந்தது என்கிறார்கள் பலர்.

பழைய வருமான வரி முறையின் கீழ் சரியான முறையில் முதலீடு செய்தால் 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் கூட 10 பைசா கூட வரியாக கட்ட தேவைப்படாது. ஆனால் சரியான முறையில் முதலீடு செய்தாலும் புதிய வருமான வரி முறையில் எந்த நிவாரணமும் அரசிடம் பெற முடியாது. புதிய வருமான வரி முறை என்பது தற்காலிகமான நிவாணரமாக இருக்கும்.. ஆனால் பழைய முறை நிரந்திரமான நிவாரணமாக இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+