மாதம் 2,900 ரூபாய் போதும்... ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்.. பொருளாதார நிபுணர் சொன்ன சூப்பர் விளக்கம்
சென்னை: ஒருவர் மிக இளம் வயதில் சேமிக்க தொடங்கினால், அவர் மிக எளிதாக ஒரு கோடியை எட்டிவிட முடியும். உதாரணத்திற்கு 25 வயதுடைய நபர், தனது 60 வயதில் ₹1 கோடியை சேமிக்க வேண்டுமென்றால், மாதா மாதம், ₹2,900 சேமித்தால் போதுமானது. ஆனால் 45 வயதில் அவர் தொடங்கினால், 60 வயதில் ₹1 கோடியை சேமிக்க, மாதா மாதம் ₹25,000 சேமிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறினார்
பணத்தை இளம் வயதிலேயே சேமிக்க தொடங்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்களை பார்ப்போம்.

முதல் காரணம்: நீங்கள் இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால், நீண்ட காலத்திற்கான முதலீடாக இருக்கும், மிக சிறிய தொகையை சேமித்தாலே போதுமானது,
இரண்டாவது காரணம்: சிறுவயதிலேயே நீங்கள் சேமிக்க தொடங்கினால், பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் அணுகுமுறையே சிறப்பாக மாறிவிடும்.
3வது காரணம்: நீங்கள் பணம் பன்மடங்கு பெருகுவதால் உங்களுக்கு மிகப்பெரிய பலனாக இருக்கும்.
4வது காரணம்: நீங்கள் மிகப்பெரிய சேமிப்பை எதிர்காலத்தில் பெறுவதற்கான வாய்ப்பை பெறுவீர்கள்
5வது காரணம்: நீங்கள் இளம் வயது உடையவர் என்பவதால் உங்களால் அதிகபடியான ரிஸ்க் எடுக்க முடியும்.
இதுபற்றி பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி, அதுபற்றி கூறும் போது, உங்கள் ஓய்வுகால வாழ்க்கையை சுதந்திரமாக கழிக்க, எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சேமிப்பை தொடங்குகிறீர்களோ, அவ்வளவு நல்லது.
உதாரணம்: 25 வயதுடைய நபர், தனது 60 வயதில் ₹1 கோடியை சேமிக்க வேண்டுமென்றால், மாதா மாதம், ₹2,900 சேமித்தால் போதுமானது.
அதுவே, 45 வயதில் அவர் தொடங்கினால், 60 வயதில் ₹1 கோடியை சேமிக்க, மாதா மாதம் ₹25,000 சேமிக்க வேண்டும். மேலே உள்ள கணக்கு, பணவீக்கத்தையும், Future Value of Money யை கணக்கில் கொள்ளாமல் கால்குலேட் செய்யப்பட்டுள்ளது.

பணவீக்கத்தையும், Future Value of Money யும் கணக்கில் எடுத்தால், ஒவ்வொரு வருடமும், எவ்வளவு பணவீக்கமோ, அந்த அளவிற்கு உங்களது முதலீட்டினை நீங்கள் அதிகரித்துக் கொண்டே போகவேண்டும். அதுதான் ரூல்..
உதாரணமாக, வருட பணவீக்கம், 5% என்று வைத்துக் கொள்வோம். அப்படி கணக்கில் எடுத்துக் கொண்டால், 25 வயதில் தொடங்குபவருக்கு, வருடா வருடம் அதிகரிக்கும் தொகையானது குறைவாகவே இருக்கும் (₹3,045, ₹3,200...). 45 வயதில் தொடங்குபவருக்கு, அந்த தொகை அதிகமாக இருக்கும் (₹26,250, ₹27,600...).
ஆகையினால் மக்களே, எவ்வளவு விரைவாக நீங்கள் சேமிப்பினை தொடங்குகிறீர்களா, அவ்வளவு அதிகமாக "Power of Compounding", உங்களுக்கு சாதகமாக வேலை செய்யும். ஆகையால் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் சேமிப்பினை... தொடங்குங்கள்...தொடருங்கள்" இவ்வாறு கூறினார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications