உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காவல் துறை​யின் உளவுத் ​துறை ஐ.ஜி.​யாக அஸ்ரா கார்க் கடந்த மே மாதம் நியமனம் செய்யப்பட்டார். தவெக ஆட்சி அமைந்த ஒரு சில நாட்களில் அஸ்ரா கார்க்கிற்கு உளவுத்துறை ஐஜி பொறுப்பை விஜய் வழங்கினார். 5 மாதங்களாக உளவுத்துறை ஐஜியாக உள்ள அஸ்ரா கார்க்கிற்கு கூடுதல் பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனித்துக்கொள்வார் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உளவுத்துறையில் டிஜிபி அந்தஸ்து பதவிதான் உயர்ந்த பதவியாக உள்ளது. இந்த நிலையில் உளவுத்துறையில் ஏடிஜிபி பணியையும் அஸ்ரா கார்க்கே கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

IG Asra Garg is Additional responsibility for Intelligence Tamil Nadu government issues order

உளவுத்துறை ஐஜி என்பது தமிழக காவல்துறையில் மிக முக்கியமான பொறுப்பு ஆகும். ஏனெனில் தமிழ்நாட்டில் நடக்கக் கூடிய அனைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அரசுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பாக உளவுத்துறை ஐஜி பொறுப்பாக உள்ளது. தமிழக உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்ட அஸ்ரா கார்க், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் கேடரை சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அஸ்ரா கார்க், பிஇ பட்டதாரி. தமிழ், பஞ்​சாபி, இந்​தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கிய அஸ்ரா கார்க், நெல்லை, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்ட எஸ்பியாக திறம்பட பணியாற்றினார்.

சட்டம் ஒழுங்கில் மிகவும் கண்டிப்பாக செயல்பட்டு திறமையான அதிகாரியாக பெயர் பெற்றவர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு சென்னை ஐகோர்ட் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்த எஸ்ஐடியின் தலைவராக அஸ்ரா கார்க்கே நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+