சென்னை ஐஐடி உருவாக்கிய தொழில்நுட்பம்.. ஸ்மார்ட்போன் முதல் ஏஐ டேட்டா சென்டர் வரை எல்லாமே மாற போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்டிரானிக் கருவிகள் சூடாவதை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது வெற்றிகரமாக இருக்கும்பட்சத்தில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மட்டுமல்லாமல், ஏஐ டேட்டா மையங்கள், ரேடார் அமைப்புகளிலும் கூட இது பயன்படுத்தப்படும்! இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

ஸ்மார்ட்போன் சார்ஜ் போட்ட சில நிமிடங்களிலேயே கை வைத்து கொள்ள முடியாத அளவுக்கு சூடாவது பலருக்கும் இருக்கும் பிரச்சினை! ஆனால், சிலருக்கு சார்ஜ் செய்யும் போது மட்டுமின்றி.. நீண்ட நேரம் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, வீடியோ கால் பேசும்போது கூட செல்போன் சூடாகும். என்ன செய்தாலும் செல்போன் கொதித்து கொண்டே இருக்கும்.

Smartphone

என்ன காரணம்

சில மாடல்கலில் மொபைல் சிப்பில் உருவாகும் வெப்பத்தை வெளியேற்றும் திறன் போதியளவு இருக்காது. அதுதான் செல்போன் இதுபோல சூடாக காரணமாகும். இந்த பிரச்சினைக்கு சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர். சென்னை ஐஐடி பேராசிரியர் அரவிந்த் பட்டமட்டா தலைமையிலான குழு, இதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இவர்களின் ஆய்வு எக்ஸ்பிரிமெண்டல் ஹீட் டிரான்ஸ்பர் என்ற சர்வதேச அறிவியல் இதழிலும் வெளியாகியுள்ளது.

நாம் செல்போனை பயன்படுத்தும்போது, ஒரு செயலியை ஓபன் செய்யும்போது, எதாவது ஒன்றை கிளிக் செய்யும்போது என ஒவ்வொரு நொடியும் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிராசசர் அதற்கு பின்னணியில் வேலை செய்யும்.. இதுபோல செய்யும்போது வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பம் வெளியேற முடியாமல் போனால், சிப் தானாகவே தனது வேகத்தை குறைத்துக் கொள்கிறது. இதை ஆங்கிலத்தில் Thermal Throttling என்பார்கள். இதன் காரணமாக கேம் விளையாடும்போது செல்போன் திடீரென ஸ்லோ ஆகிவிடும்.

புதிய தொழில்நுட்பம் என்ன?

வெப்பத்தை குறைக்க இதுவரை பயன்படுத்தப்பட்ட அமைப்புகளில்.. வெப்பம் உருவாகும் பகுதியும் வெளியேறும் பகுதியும் ஒரே இடத்தில் இருந்தன. இதனால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்புகளில் வெப்பத்தை வெளியேற்ற போதிய இடம் கிடைக்கவில்லை. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், சென்னை ஐஐடி டீம் புதிய டிசைனை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய டிசைன்படி சிப்பின் ஒரு பக்கத்தில் உருவாகும் வெப்பம், இன்னொரு பக்கம் வழியாக வெளியேறும். சிப்பின் தடிமனான பக்கத்தில் இதற்காக சிறிய உலோக தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பம் ஒரே பக்கத்தில் தேங்குவது தடுக்கப்படும்!

எப்படி செயல்படுகிறது?

ஹீட் பைப்பிற்குள் காற்று புக முடியாத அளவுக்கு 3:1 என்ற விகிதத்தில் எத்தனால் மற்றும் தண்ணீர் கலவை நிரப்பப்பட்டுள்ளது. சிப்பில் இருந்து வரும் வெப்பத்தால் இந்த திரவம் ஆவியாக மாறி, குழாயின் குளிரான பகுதிக்கு செல்கிறது. அங்கு மீண்டும் திரவமாக மாறும். இதுபோல தொடர்ந்து மாறி மாறி செல்லும்போது வெப்பம் குறையும். இதற்கு மின்மோட்டார் அல்லது பம்ப் எதுவும் தேவையில்லை. இந்த புதிய டிசைன் மூலம் வெப்பம் சுமார் 6 டிகிரி செல்சியஸ் வரை குறைவதால் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் செல்போன் தொடர்ந்து இயங்கும்.

இந்த புதிய தொழில்நுட்பம் தற்போது சோதனை நிலையிலேயே உள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்தாலும் கூட இன்னும் பல கட்ட ஆய்வுகள் செய்ய வேண்டி இருக்கிறது. அவை அனைத்திலும் இந்த டிசைன் வெற்றிகரமாக இருந்தால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் மட்டுமல்லாமல், ஏஐ டேட்டா மையங்கள், ரேடார் அமைப்புகளிலும் கூட இது பயன்படுத்தப்படும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+