Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டு கோமியத்தில் மருத்துவ குணம் என சொன்ன ஐஐடி இயக்குநருக்கு.. பத்ம ஸ்ரீ விருது! என்னங்க இதெல்லாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடியும் ஒருவர். விருது கொடுப்பது பிரச்சனை கிடையாது. ஆனால், அது யாருக்கு கொடுப்பது என்பதுதான் பிரச்சனை என, கோமியம் குறித்து காமகோடியின் கருத்தை டேக் செய்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக நாடு முழுவதும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காமகோடியும் ஒருவர்.

IIT Madras Director IIT Madras IIT Padma Shri

என்ன பேசினார் காமகோடி?

கடந்த ஆண்டு, தி.நகரில் உள்ள கோ சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காமகோடி பங்கேற்றிருந்தார். அப்போது அவர், "கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இது ஜுரத்தை கூட சரியாக்கும். பாக்டீரியா, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராக செயல்படுவதால் இதற்கு இந்த தனிச்சிறப்பு உண்டு. ஒருமுறை சந்நியாசி ஒருவருக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது. அவர் கோமியத்தை குடித்தார். அவருக்கு 15 நிமிடங்களில் காய்ச்சல் விட்டுவிட்டதாக என்னிடம் கூறினார்" என்று பேசியிருந்தார்.

இதுக்குதான் பத்ம ஸ்ரீ விருதா?

அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. கோமியம் காய்ச்சலை சரியாக்கும் என்றால்.. மருத்துவமனைகளும், மருத்துவர்களும், மருந்து மாத்திரைகளும் எதற்கு? என்று அவருக்கு கேள்வி எழுப்பப்பட்டது. பல்வேறு அமைப்புகளும் காமகோடி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற போலி அறிவியல் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தன. இப்படி இருக்கையில்தான் தற்போது காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாயம்

ஏற்கெனவே பல்வேறு துறைகளை பாஜக தனது கைக்குள் போட்டுக்கொண்டாக விமர்சனங்கள் இருக்கின்றன. குறிப்பாக சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டபோது.. இந்த விமர்சனங்கள் கூர்மையடைந்தன. இப்படி இருக்கையில் பத்ம விருதுகளிலும் அரசியல் சாயம் பூசப்படுகிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

கேள்வியும் சமாளிப்பும்

இல்லையே அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாதே! பாருங்க கேரளாவில் எங்கள் கொள்கை எதிரி சிபிஎம் தலைவர் அச்சுதானந்தனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே விருதுகளில் பாரபட்சம் கிடையாது என்று பாஜகவினர் சமாளிக்க.. கேரளாவில் எலெக்ஷன் வருது.. அதனால அங்க விருதை அள்ளி கொடுக்கிறீங்க! இதுகூடாவ எங்களுக்கு தெரியாது என எதிர்த்தரப்பினர் வரிசை கட்டியுள்ளனர்.

அறிவியலுக்கு புறம்பான கருத்து

அதேபோல அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை சொன்ன காமகோடிக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், அவரது கருத்துக்களை பாஜக ஏற்றுக்கொண்டு, ஊக்குவிப்பதை போல இருக்கிறது எனவும் எதிர் தரப்பினர் விமர்சித்திருக்கிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+