கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறனை ஊக்குவிக்க சென்னை ஐஐடி புதிய திட்டம்
சென்னை ஐஐடி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தொழில் திறன் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
சென்னை: சென்னை ஐஐடி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தொழில் திறன் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது
ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையானது AI-சார்ந்த திறன் தளமான GRADSKEY உடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு 'தொழிலுக்கு ஏற்ற திறன்களை அளிக்கும்' பயிற்சி அளிக்கிறது. தொழில்துறையினரே அவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இந்த தொழில் திறன் திட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு மாணவர் பட்டப்படிப்பு திட்டத்தின் கால அளவு இருக்கும். இருப்பினும், படிப்புகள் மாணவர்களின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப படிப்படியான திறன்களை உருவாக்க குறுகிய, வருடாந்திர சான்றிதழ் திட்டமாக பிரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், முதல் ஆண்டில் இருந்து, மாணவர்கள் படிப்படியாக தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறுகிறார்கள். மாணவர்கள் இதற்கான சான்றிதழுடன் தொழில் திறன்களைப் பெறத் தொடங்குவார்கள். மூன்று ஆண்டுகளின் முடிவில், தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த படிப்பில் சேர 100 மாணவர்கள் பதிவு செய்யலாம். பாடத்திட்டங்கள் சுமார் 60-75 சதவீதம் ஆன்லைனில் இருக்கும், மீதமுள்ள வகுப்புகள் நேரடியாக இருக்கும். பாடத்திற்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற 4 ஆண்டுகால ஆன்லைன் பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, "இன்றைய உலக சூழலில் எலெக்ட்ரானிக்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. செல்போன்கள் உற்பத்தியும், வாகனங்கள் தயாரிப்பும் அதிகரித்துள்து. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எம்பெடெட் உற்பத்தி துறையில் நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆன்லைன் படிப்பு இத்துறையில் ஏற்படும் தேவையை எதிர்கொள்ள பெரிதும் உதவும்" என்றார்.












Click it and Unblock the Notifications