என்ஐஆர்எஃப் ரேங்கிங்! முதலிடத்தில் ஐஐடி சென்னை சாதனை! 8ஆவது இடத்தில் அமிர்தா!
சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அது போல் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான பட்டியலில் கோவையைச் சேர்ந்த அமிர்த விஷ்வ வித்யபீடம் 8ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த ரேங்கிங் அடிப்படையில் மாணவர்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சேருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ஐஆர்எஃப் (National Institute of Ranking Framework) எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, மத்திய கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த பல்கலைக்கழகங்கள், சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

இந்த பட்டியலை வைத்து எந்தெந்த கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் சிறந்த கல்வி, ஆராய்ச்சி பிரிவு, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு, பாதுகாப்பு, தரம், எத்தனை மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்கிறார்கள், எத்தனை மாணவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எந்தெந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை பணிக்கு எடுக்கிறது, பரிசோதனை கூடங்கள், கணினி வசதி உள்ளிட்டவைகளை மாணவர்களும் பெற்றோர்களும் தெரிந்து கொண்டு அந்த கல்வி நிலையங்களில் தாராளமாக எந்த தயக்கமும் இன்றி சேரலாம்.
இந்த பட்டியலை ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதை வைத்துதான் மத்திய அரசு ஆய்வு நடத்தி இந்த தரவரிசையை கொடுக்கிறது.
அந்த வகையில் சிறந்த கல்வி நிறுவனங்களில் டாப் 10 வரிசை:
ஐஐடி சென்னை
ஐஐஎஸ் பெங்களூர்
ஐஐடி மும்பை
ஐஐடி டெல்லி
ஐஐடி கான்பூர்
ஐஐடி கோரக்பூர்
ஐஐடி ரூர்க்கி
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டெல்லி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
இந்தியாவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களின் ரேங்க்:
இந்திய அறிவியல் மையம், பெங்களூர்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி
மணிப்பால் உயர் கல்வி அகாதெமி, மணிப்பால்
ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டெல்லி
டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி
அமிர்தா விஷ்வ வித்யபீதம், கோவை
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார்
டாப் 10 கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்
இந்து கல்லூரி, டெல்லி
மிராண்டா ஹவுஸ், டெல்லி
ஹான்ஸ்ராஜ் கல்லூரி, டெல்லி
கிரோரி மால் கல்லூரி, டெல்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி
ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கொல்கத்தா
ஆத்மராம் சனாதன தர்மம் கல்லூரி, டெல்லி
சேவியர் கல்லூரி, கொல்கத்தா
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை
பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications