குன்னம், பல்லாவரம் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்! அறிவித்தார் பாரிவேந்தர்
சென்னை: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். அந்த வகையில் அக்கட்சி குன்னம், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ஐஜேகே கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு மார்ச் 25-ம் தேதி உறுதி செய்யப்பட்டது.

பல்லாவரம் (செங்கல்பட்டு மாவட்டம்), குன்னம் (பெரம்பலூர் மாவட்டம்) ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது பல்லாவரம் தொகுதியில் வழக்கறிஞர் வெங்கடேஷ் போட்டியிடுகிறார், அது போல் குன்னத்தில் காயத்ரி என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் அறிவிப்பை கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்தார்.
இந்த இரு வேட்பாளர்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அறிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பாரிவேந்தருக்கு செல்வாக்கு உள்ள மாவட்டமாகும். இங்கு எம்பியாக இருந்த போது அந்த மாவட்டத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு தனது எஸ்ஆர்எம் கல்லூரியில் கல்வியை கொடுத்துள்ளார். எனவே அங்கு அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது. மேலும் திமுக கூட்டணி சார்பில் குன்னம் தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications