Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐஜேகே! இதுவரை எந்தெந்த கட்சியுடன் இடம் பெற்றது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஜேகே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்திக்கும் என அந்த கட்சியின் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ள நிலையில் அந்த கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை யாருடன் எல்லாம் கூட்டணி வைத்தது என்பதை பார்க்கலாம்.

இந்திய ஜனநாயக கட்சியை எஸ்.ஆர்.எம், கல்விக் குழுமத்தை தொடங்கிய டி.ஆர். பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சி இதுவரை பாஜக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிருந்தது.

ijk tamil nadu assembly election 2026 2026

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. அது போல் 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான ஐமுகூ கூட்டணியில் போட்டியிட்டது.

அந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பச்சமுத்து வெற்றி பெற்றார். அவர் ஐஜேகே கட்சி சார்பில் போட்டியிட்டாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அந்த தொகுதிக்கு கல்வி விஷயத்தில் நிறைய செய்திருக்கிறார் என்கிறார்கள். அந்த தொகுதிக்குள்பட்ட மாணவர்களுக்கு குறிப்பிட்ட வரன்முறை வைத்து கல்லூரியில் சீட் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஐஜேகே. ஆனால் அப்போது அக்கட்சி வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது. கிடைத்ததே ஒரு தொகுதி, அதிலும் அவர் ஏற்கெனவே வென்ற பெரம்பலூர் தொகுதிதான். ஆனாலும் பாரிவேந்தர் தோல்வி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து மாநில சட்டசபை தேர்தல்கள் என பார்த்தோமேயானால் 2016ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான என்டிஏவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் தோல்வி அடைந்தது. அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஐஜேகே 40 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டது.

அதாவது கும்மிடிப்பூண்டி, திருத்தணி , சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), பா்கூா் , தளி, அரூா் (தனி), செங்கம் (தனி), கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி(தனி), ஏற்காடு (எஸ்டி), வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நத்தம், குளித்தலை, மணப்பாறை, திருவரங்கம், பெரம்பலூா் (தனி), அரியலூா், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், நெய்வேலி, புவனகிரி, நன்னிலம், திருவிடைமருதூா் (தனி), திருவையாறு, பேராவூரணி, திருப்பத்தூா், சாத்தூா், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 40 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒன்றில் கூட வெல்லவில்லை.

பாரிவேந்தர் நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளார். அவர் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட ஐஜேகே முடிவு செய்து , அதிமுகவிடம் கோரிக்கையை பாரிவேந்தர் விடுத்துள்ளார்.

பாரிவேந்தர் யார்

பச்சமுத்து பாரிவேந்தர் என்பவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1954 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பிறந்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கணிதத்தில் பிஎஸ்சி பயின்றார். 1968 ஆம் ஆண்டு எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தை தொடங்கினார். பின்னர் அவர் அரசியலில் இறங்கினார். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு தற்போது 71 வயதாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+