Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரவணன் பகீர்.. நடிகர் விஜய் அப்பாகிட்ட பலமுறை கெஞ்சியும் கேட்கல.. அதிர்ந்துபோன விஜய் ரசிகர்கள்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி பட்டமே நடிகர் விஜய்க்கு சொந்தம் இல்லை. எனக்கு கொடுத்த அந்த பட்டத்தை அவருக்கு பயன்படுத்த வேண்டாம் என தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கெஞ்சி கேட்டும் அவர் கேட்கவில்லை என நடிகர் சரவணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரவணன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்பியாக பணிபுரிந்தவர். தாய் செவிலியர். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கவிதைகளை எழுவதில் ஆர்வமுடை இவர் சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றார்.

Ilaya Thalapathi pattam belongs to me ot to Actor Vijay, says Actor Saravanan

1990 களில் இவர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார். இவர் தாயுமானவன் என்ற படத்தை இயக்கியுமுள்ளார். 1991 ஆம் ஆண்டு வைதேகி வந்தாச்சு, 1992 ஆம் ஆண்டு பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். பார்ப்பதற்கு நம்மூர் பையன் போல் இருந்ததால் இவரை மக்கள் ரசித்தனர்.

இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். அங்கு கல்லூரி காலங்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்துகளில் செல்வேன் என சக போட்டியாளர்களிடம் கூற இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு 1996 ஆம் ஆண்டு சூர்யா என்பவருடன் திருமணமாகிவிட்டது. ஆனால் அவருக்கு குழந்தை இல்லை என்பதால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஆண் குழந்தை உள்ளது.

அந்த குழந்தை இவர் பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்புதான் பிறந்தது. அதனால் அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என போட்டியாளர்களிடம் வேதனைபட்டார். இந்த நிலையில் முதல் மனைவிக்கு சொந்தமான முகலிவாக்கம் வீட்டை காலி செய்யாமல் சரவணன் மிரட்டுவதாக சூர்யா கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் தனக்கு சொந்தமான வீட்டில் பணம் கட்டி பெற்ற கார் பார்க்கிங்கில் புரோக்கர் ஒருவர் கடையை கட்டிவிட்டதாகவும் அதற்கு தீர்வு காணுமாறு அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்தார். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார்.

Ilaya Thalapathi pattam belongs to me ot to Actor Vijay, says Actor Saravanan

அதாவது சூப்பர் ஸ்டார் பட்டத்தை 45 ஆண்டுகளாக ரஜினி வைத்துள்ளார். அவருக்கு கலைப்புலி எஸ் தாணு அந்த பட்டத்தை வழங்கினார். அப்படியிருக்கையில் சூப்பர் ஸ்டார் விஜய் என கூறி விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி வருகிறார்கள். ஆனால் இதுவரை விஜய் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இது ரஜினி ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் முதல் பாடலான காவாலா பாடல் பெரும் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலும் வெளியானது. அதில் உள்ள வரிகள் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக விஜய்க்கு ரஜினி அறிவுரை வழங்குவது போல் பொருத்தமாக அமைந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இப்படி ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்களும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்களும் கூறி வரும் நிலையில் விஜய்யின் இளைய தளபதி பட்டமே விஜய்க்கு சரவணன் விட்டுக் கொடுத்த பட்டம் என புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து சரவணன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: 90 களில் நம்ம ஊரில் இருந்து ஒருத்தன் சினிமாவுக்கு போய் நடிக்கிறான் என்பதால் சேலத்தில் எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் திமுகவுல அமைச்சராக இருந்த சேலம் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் வந்தார். அப்போது அவர் பேசுகையில் சேலத்தில் தளபதி மாதிரி இருந்த தம்பி சரவணன் சினிமாவுக்கு போயாச்சு, அவருக்கு ஏதாவது பட்டம் கொடுக்கணுமே. தளபதி பட்டம் கொடுக்கலாம்னு நெனச்சேன். ஆனால் சென்னையில் ஏற்கெனவே ஒரு தளபதி இருக்காரு, அதனால் இளைய தளபதின்னு கொடுத்துடலாம் என கூறினார். அந்த வார்த்தையை என் பெயருடன் உச்சரித்தும் ஆறுமுகம் வைத்தார்.

Ilaya Thalapathi pattam belongs to me ot to Actor Vijay, says Actor Saravanan

இந்த விழாவுக்கு பிறகு வெளியான நல்லதே நடக்கும் படத்தில் டைட்டில் கார்டில் இளைய தளபதி சரவணன்னு போட்டாங்க. அதன் பின்னர் நான் நடித்த படங்களில் இளைய தளபதின்னுதான் போட சொன்னாங்க. நல்லா போன படவாய்ப்பு திடீர்னு குறைந்து போனது. நானும் அந்த பட்டத்தை மறந்துட்டேன். இந்த சூழலில் திடீர்னு நடிகர் விஜய் ஹீரோவா நடித்த படத்துல அவரது பெயருக்கு பின்னாடி இளைய தளபதினு பட்டத்தை பார்த்தேன்.

உடனே அதிர்ச்சி அடைந்தேன். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸ்க்கு நானும் என் அண்ணனும் நேர்ல போய், எங்கள் டைட்டிலை ஏன் சார் யூஸ் செய்தீங்கன்னு கேட்டோம். அதற்கு அவர் உங்களுக்கு படம் வந்தா நீங்க போட்டுக்கங்கன்னு சொன்னாரு. அவர் என்ன நெனச்சு சொன்னாரோ எனக்கு அதுக்கு பிறகு பட வாய்ப்புகளே வரலை. நானும் அப்படியே ஒதுங்கிட்டேன். இவ்வாறு சரவணன் வேதனையுடன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+