"வெவ்வேறுதான்".. ஆனால் எங்கள் இலக்கு தமிழ்நாடுதான்.. இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ
சென்னை: எங்கள் இருவரின் இலக்கும் தமிழகம்தான் என இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைஞானி இளையராஜாவுடன் விமான நிலையத்திலிருந்து ஒரு வீடியோவை போட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் பேட்டரி வாகனத்தில் பயணிக்கிறார்கள்.
இளையராஜாவுக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மான் அமர்ந்துள்ளார். ஹங்கேரி நாட்டிற்கு இளையராஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு விடுதியில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

ஆஸ்கர் நாயகன்
அது போல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் அமெரிக்கா சென்றிருந்தார். இருவரும் ஒரே விமானத்தில் வருவதாக தெரிகிறது. அதற்கு முன்னதாக விமான நிலையத்திலிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு பேட்டரி காரில் செல்கிறார்கள். இந்த வீடியோவைதான் ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

இருவேறு கண்டங்கள்
அதில் "நாங்கள் இருவேறு கண்டங்களில் இருந்து திரும்பினாலும் எங்கள் இலக்கும் எப்போதும் தமிழ்நாடுதான்" என கூறியுள்ள ரஹ்மான், தான் அமெரிக்காவிலிருந்து திரும்புவதாகவும் இளையராஜா பூடாபெஸ்ட்டிலிருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்தான் இணைப்பு மொழி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரஹ்மான்.

இன்ஸ்டாவில் வைரல்
விமான நிலையத்தில் எடுத்த இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்கள். இரு லெஜன்ட்கள் என்றும் இரு மாஸ்டர்கள் என்றும் காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க தெய்வங்களே என நெட்டிசன்கள் ஆரவாரம் செய்துள்ளார்கள்.

3 தினங்கள்
அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஹங்கேரி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அதிக மழை காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதத்தால் அவர் 7 மணி நேரம் காத்திருப்பு அறையில் காத்திருந்துவிட்டு பின்னர் ஹங்கேரி விமானத்தில் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications