Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொச்சை கொட்டை குழம்பை விரும்பி சாப்பிட்ட இளையராஜா மகள்.. கேன்சர் இருப்பதே தெரியாத பவதாரிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா மகள் பவதாரணிக்கு தனக்கு புற்றுநோய் இருப்பதே தெரியாதாம். இலங்கைக்கு செல்வதற்கு முன்புதான் அவருக்கு தெரியுமாம்.

இளையராஜாவின் செல்ல மகள் பவதாரணி (47). இவர் ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்த, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

Ilayaraja daughter Bavatharini does nt about her health issues

பவதாரணி மயில் போல பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பிலும் பவதாரணி பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு 3 திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்து வந்தார். 6 மாதங்களாக உடல் நல பிரச்சினையில் இருந்தார் பவதாரணி. இவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 27, 28 இலங்கையில் நடைபெற இருந்தது. இளையராஜா தலைமையில் இலங்கைக்கு இசை குழுவினர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் பவதாரிணி நேற்று மாலை 5.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் இன்று மாலை இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் பவதாரணிக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவருடைய மாமா மகள் விலாசினி you tube channelக்கு கூறியிருப்பதாவது: பவதாரணியை கடந்த ஆண்டு நடந்த கொலு விழாவில் பார்த்தேன்.

அவர் ஏற்கெனவே ஒல்லியாக இருப்பார். இதில் மேலும் ஒல்லியாக இருந்ததால் நானும் அம்மாவும் பவதாவிடம் கேட்ட போது அவர் டயட்டில் இருப்பதாக சொன்னார். கார்த்திக் ராஜாவின் மனைவி கேட்டபோதும் அவர் தனது உடம்புக்கு ஒன்றும் இல்லை என்றுதான் கூறியிருந்தார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நீர் சத்து இல்லை என்று அவரை அட்மிட் செய்தார்கள்.

அப்போதுதான் பவதாவுக்கு கேன்சர் என்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த விஷயம் பவதாவிடம் தெரிவிக்கவில்லை. பவதாவுக்கு தனது அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஜீவா அத்தைக்கும் பவதாவை மிகவும் பிடிக்கும் . பவதா தேசிய விருது வாங்கியதற்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.

பவதா தனக்கு எந்த பிரச்சினை என்றாலும் யாரிடமும் சொல்ல மாட்டார். மறைத்து மறைத்து வைப்பார். என் அம்மாவுக்கு ஒரு நாள் போன் செய்து மொச்சைகொட்டை குழம்பு கேட்டார். இந்த நிலையில் இலங்கைக்கு செல்வதால் அவருக்கு ரிவ்யூ செய்ய மருத்துவமனைக்கு சென்றார்கள். அப்போது அங்கு கீமோ உள்ளிட்ட கேன்சர் தொடர்பான வார்த்தைகளை பேசியதை கேட்ட பவதா, மருத்துவரிடம் என்ன நடந்தது, ஏன் கீமோ குறித்து பேசுகிறீர்கள் என கேட்டார். v

அப்போதுதான் அவருக்கு கேன்சர் என்றும் அது 4ஆவது நிலையில் இருக்கிறது என்றும் பவதாவுக்கு சொல்லப்பட்டது. முதலில் பித்தப்பை, பிறகு கல்லீரல், கணையம், நுரையீரல் என அனைத்திற்கும் பரவியது. யுவன் சங்கர் ராஜாதான் தனது சகோதரியை இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவ்வாறு விலாசினி தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+