எத்தனை பிரதமர்கள் ஆண்டார்கள்.. மோடிக்கு வாய்த்த கொடுப்பினை யாருக்கும் இல்லை! எமோஷனலாக பேசிய இளையராஜா
சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா பேசும் போதே எமோஷ்னலான சம்பவம் நடந்துள்ளது.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.. இந்த ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று அயோத்தியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தொடங்கி பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார்.
ராமர் கோயில்: பிரதமர் மோடி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒவ்வொரு 10 மீட்டருக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும், ஏற்கனவே பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே ராமர் கோயில் அருகே செல்ல அனுமதி தரப்பட்டு இருந்தது. மற்ற வாகனங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
அதேநேரம் நாடு முழுக்க உள்ள பக்தர்கள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. இதற்கிடையே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளையராஜா: இந்த நிகழ்வில் இளையராஜா பேசுகையில், "இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல்முறையாக நடக்கிறது. சரித்திரம் என்று சொல்லும் போது தமிழ்நாட்டில் இல்லை.. இந்தியாவில் இல்லை.. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம்.
வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும். இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாகப் புகழ் சென்று சேரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்.. யாரால் முடியும் இது..
எமோஷ்னல் ஆனார்: அனைவராலும் இது செய்ய முடியுமா என்ன.. அவருக்கு எழுதி இருக்கு பாருங்க.. இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்.. யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்தில் நிற்கிறது என்று கணக்கு பாருங்கள்.. யார் செய்தது அதிகம் இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே சொல்லும் போதே கண்களில் நீர் வருகிறது" என்று எமோஷ்னல் ஆனார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த நாளில் உங்கள் முன்பு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. அதேநேரம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இப்போது இங்கே இருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
தரிசன நேரம்: கும்பாபிஷேக நாளில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், நாளை முதல் பக்தர்கள் ராமரைத் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், முன்பதிவு வசதி: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். மேலும், காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications