பிரசாத்தால் மனசு உடைந்த இளையராஜா.. மதுரை மீனாட்சி கோவிலுக்கு வருகை.. உருக்கமாக பிரார்த்தனை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா சிறப்பு பிரார்த்தனை செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அளவுக்கு அதிகமாக மனசு உடைந்து போயிருந்த இளையராஜா.. இன்று புத்தாண்டு என்பதால், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 2020-ம் ஆண்டை பொறுத்தவரை அனைவருக்குமே சோதனைதான்.. எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.. எப்போது அந்த வருடம் முடியும் என்றிருந்தது.

அப்படித்தான் இசைஞானி இளையராஜாவுக்கும்.. 2021-ல் இதுவரை சந்திக்காத கோர்ட், கேஸ் என அனைத்தையும் பார்த்துவிட்டார்.

 Ilayaraja Sami Darshan at Madurai Meenakshi Amman temple

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் இந்த அளவுக்கு பெரிதாகும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.. தியானம் செய்ய ஆசைப்பட்டு அதுவும் நடக்காத நிலையில், அவருடைய விருதுகளும், மியூசிக் நோட்ஸ்களும் அந்த ஸ்டுடியோவின் குடோனில் தூக்கி போட்டுவிட்டதாக தகவல் பரவியது.

இந்த விஷயம் இளையராஜாவுக்கும் தெரிந்து மிகவும் மனம் நொந்து போனதாக, அவரது வக்கீல் செய்தியாளர்களிடமும் வருத்தத்துடன் கூறியிருந்தார்.. கடைசிவரை ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்று முழுவதும் அவர் வரவே இல்லை.. இசைக்கு நடந்த இந்த அவமானத்துக்கு திருமாவளவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் ஆண்டு சிறப்பாகவும், மக்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.. அதனால், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன... அந்த வகையில், இளையராஜாவும் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

திருவண்ணாமலை கோயிலுக்கு முன்பிருந்தே, பண்ணைபுரத்துக்காரரின் மனசுக்கு இந்த மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் நெருக்கமானது.. கடுமையான மன உளைச்சல் உள்ள நிலையில், இன்று இந்த கோயிலுக்கு இளையராஜா வந்து சென்றுள்ளார்.. இந்த புத்தாண்டில் நிம்மதியுடனும், மன உற்சாகத்துடனும் இசையில் பல அரிய இசைப்படைப்புகளை வழங்க வேண்டும் என்பதே அனைத்து இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+