இளையராஜா வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பவதாரிணி உடல்.. இரவு தேனிக்கு எடுத்துச்செல்ல உள்ளதாக தகவல்!
சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணிக்கு மேல், அவரது உடல் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகி பவதாரிணி உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25ஆம் தேதி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்று ஆம் தேதி இலங்கையில் காலமானார் பவதாரிணி. இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை இன்று காலை புறப்பட்டார். இந்த நிலையில், பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து, இன்று பவதாரிணி உடல் சென்னை வந்தது.

பவதாரிணியின் உடலை பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்திருந்தனர். அவர்கள், அங்கிருந்து பவதாரிணி உடலை பெற்றுக்கொண்டனர்.
பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. 5 மணிக்கு மேல் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் எனத் தெரிகிறது. தற்போது இளையராஜா இல்லத்திற்கு கங்கை அமரன் மகன் பிரேம்ஜி, பாரதிராஜா மகன் மனோஜ் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகர் மனோ, இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அஞ்சலிக்கு பிறகு பவதாரிணியின் உடல் தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications