520 பெண்களுடன் தகாத உறவு! கணவனை சிக்க வைத்த ஆணுறைகள்.. மனைவியின் சைலண்ட் ரிவெஞ்ச்.. சூப்பர் ட்விஸ்ட்
சென்னை: கல்யாணம் என்றால் நம்பிக்கை, புரிதல், பொறுப்பு போன்றவற்றின் அடிப்படையாகும்.. ஆனால் இதையெல்லாம் சுக்குநூறாக நொறுக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன.. ஜப்பானிலும் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. அதிர்ச்சி, வேதனை கலந்த இந்த சம்பவம் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது என்ன தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த பெண்ணின் பெயர் நேமு குசானோ.. ஒரு இளைஞரை நேரில் சந்திக்கிறார், அதுவே நட்பாகவும், சில நாட்களிலேயே காதலாகவும் மாறியது.. பிறகு 2 பேரும் கல்யாணம் செய்து கொண்டார்கள்.. மகிழ்ச்சியான மணவாழ்க்கையை தம்பதி துவங்கினர்..

கணவன் - மனைவி
இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.. ஆனால் அந்த குழந்தை தீராத நோயுடன் பிறந்துவிட்டது.. ஆனால் ஒருகட்டத்தில் கணவர் எப்போது பார்த்தாலும், வேலை வேலை என்று சொல்லி வெளியே இருப்பாராம்.. வீட்டையும், குழந்தையையும் நாளடைவில் கவனிப்பதையே விட்டுவிட்டார்.. பிறகு சரியாக வீட்டிற்கும் வராமல் இருப்பது, தாமதமாக வருவது என்று குடும்பத்தை கண்டுக்காமலேயே இருந்துள்ளார்.
எனினும், கணவரின் நடவடிக்கையை குசானோ பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. குடும்பத்திற்காக உழைக்கிறார் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
மேலும், குழந்தையை தூக்கிக்கொண்டு, மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் ஓடி சிகிச்சையை தந்து கொண்டிருந்தார் நேமு குசானோ.
520 கள்ளக்காதல் - தகாத உறவு
நாளடைவில் கணவரின் நடவடிக்கையில் குசானோவுக்கு சந்தேகம் வந்தது.. சட்டைப் பையில் நிறைய ஆணுறைகள் இருப்பதை கண்டு அதிர்ந்தார்.. செல்போனில் தொடர்ந்து வரும் வித்தியாசமான நோட்டிஃபிக்கேஷன்கள் அதற்கு மேல் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.. எனினும் இதுகுறித்து கணவரிடமும் எதுவும் கேட்காமல், தன்னுடைய கணவர் எந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார்? என்பதற்கான ஆதாரங்களை அமைதியாக திரட்ட துவங்கினார்.
அப்போது குசானோவுக்கு தலையில் இடியே விழும்படியான அதிர்ச்சி காத்திருந்தது.. தன்னுடைய கணவருக்கு 520க்கும் மேற்பட்ட பெண்களுடன் தகாத உறவு இருப்பது தெரிய வந்தது.
பாலியல் அடிமையாதல்
அப்போதும் குசானோ கத்தவில்லை, சண்டை போடவில்லை, சோஷியல் மீடியாவிலும் வெளியிடவில்லை.. இதற்கு என்ன செய்வது? என்று அமைதியாக யோசித்தார். கணவரின் இந்த நடத்தைக்கு பின்னால் ஏதோ ஒரு மனநல பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கே குசானோவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது..
கணவருக்கு 'பாலியல் அடிமையாதல்' என்ற மனநல பாதிப்பு இருப்பதும், அது அவரது ஸ்கூல் நாட்களிலிருந்தே இருந்து வந்ததும் டாக்டர்கள் மூலம் தெரியவந்தது..
இதைக்கேட்டு நிலைகுலைந்து போன குசானோ, கணவரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்தார். எனினும், குழந்தைக்காக மட்டும் தொடர்பை வைத்துக்கொண்டார்...
சைலண்ட் ரிவெஞ்ச்
தன்னுடைய வலி, வேதனை, கஷ்டங்களை மறக்க ஜப்பானில் பிரபலமான மாங்கா காமிக்ஸ் வடிவில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை வரைய ஆரம்பித்தார்... அதில் கோபம் இல்லை, பழிவாங்கும் வார்த்தைகள் இல்லை.
ஆனால், ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வரியும் அவர் அனுபவித்த வேதனையை வெளிப்படையாக சொல்லும்படி இருந்தது.. இவைகள் அனைத்தும் தற்போது மாங்கா புத்தகமாக வெளிவந்து, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் கவனத்தை பெற்று வருகிறது..
சோஷியல் மீடியாவில் இந்த செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது.. "இதுதான் சைலண்ட் ரிவெஞ்ச்" அதாவது சத்தமில்லாமல் அதேசமயம் ஆழமான பழிவாங்கல் என்று நேமு குசானோவை இணையவாசிகள் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்..!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications