ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜ் டேமேஜ்! சசிகலா அப்செட்! தினகரன் ரிவர்ஸ் கியர்! குஷியில் எடப்பாடி அன் கோ!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் வலிமையை உணர்த்திய எடப்பாடி பழனிசாமி.
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜ் மொத்தமாக டேமேஜ் ஆகியிருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு வெடி வெடிக்காத குறையாக கொண்டாடி வருகிறது.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் உட்டவில்லை என்று கூறும் கதையாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக ஓ.பன்னீர்செல்வம் பிரஸ்மீட்டில் பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் ஆதரவு கோரி சந்திக்க வருவார் என எதிர்பார்த்த சசிகலாவுக்கு அவரது மூவ்மெண்ட்கள் கடும் அப்செட் அளித்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் வந்தது, அதிமுகவில் அரங்கேறிய அதிகார மோதல் பல திருப்புமுனைகளை கொண்ட சினிமா காட்சிகளை போல் விறுவிறுப்பானது. பி பார்ம் படிவத்தில் கையெழுத்து போட ரெடி, தனியாக வேட்பாளர் அறிவிப்பு, ஆதரவு கோரி சசிகலாவை உறுதியாக சந்திப்பேன், பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தாம் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெறுவேன், இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு, வேட்பாளர் வாபஸ், என பல அந்தர்பல்டிகளை அடித்து அரசியலில் தனது உறுதித்தன்மையை இழந்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி முகாம்
வழிய வந்து இரட்டை இலை சின்னம் வெற்றிபெற ஆதரவு என ஓ.பன்னீர்செல்வம் கூறியும் அவரை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சேர்க்காமல் பங்கம் செய்திருக்கிறது எடப்பாடி தரப்பு. இதனால் உள்ளுக்குள் அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன் என்பதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் மனதளவில் மிகவும் சோர்ந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். இருப்பினும் பாஜக, மற்றும் ஆதரவாளர்கள் ஒரு சிலர் கொடுக்கும் ஊக்கம் காரணமாக இன்னும் பிரஸ்மீட்கள் மூலம் தனது இருப்பை காட்டி வருகிறார்.

தினகரன் ரிவர்ஸ் கியர்
ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில் டிடிவி தினகரனும் குக்கர் சின்னம் கிடைக்கவில்லை எனக் கூறி ரிவர்ஸ் கியர் போட்டு தேர்தலில் இருந்து பின் வாங்கியிருப்பதால் கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா என் முழக்கத்துடன் கொண்டாடி தீர்த்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் தங்கள் தரப்பு வலிமையை மிகத் தெளிவாக உணர்த்தி அதில் கட்சியளவில் வெற்றியும் கண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சசிகலா ஏமாற்றம்
ஓ.பன்னீர்செல்வம் அடித்த அந்தர்பல்டிகளை பார்த்து சசிகலாவுக்கு அவர் மீது ஏக வருத்தமாம். ஓ.பன்னீர்செல்வம் மீதான வருத்தத்தை அவரது தம்பி ஓ.ராஜாவிடம் அவர் வெளிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications