தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் குட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
கோடை வெயில் ஒரு பக்கம் அதிகமாக இருந்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கோவை, தேனி. விழுப்புரம். தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

வெப்பச்சலனத்தால் மழை
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணாமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் என 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்ப நிலை அதிகம்
சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சின்னக்கல்லாரில் 7 செ.மீ
தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 7 செ.மீ மழையும், வால்பாறையில் 6 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 செ.மீ மழையும், சோலையாரில் 4 செ.மீ மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் குடியியான்மலையில் 3 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
வரும் ஜூன் 18 ஆம் தேதி கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், ஜூன் 18, 19 தேதிகளில் குஜராத் கடற்பகுதிகளில் பேரலையானது 4 செ.மீ வரை எழும்பக்கூடும் என்பதாலும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாமென அறிவுறுத்தி உள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications