சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் முக்கிய அலார்ட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு - IMD எச்சரிக்கை

    சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அடுத்த 48 மணிநேரங்களுக்கு சென்னை நகரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸ் முதல் மற்றும் 24 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கும்.

    சென்னை, அதன் அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 13 ஆம் தேதியான இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

    மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்துமியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    அடுத்த 6 மணி நேரம்

    அடுத்த 6 மணி நேரம்

    இந்நிலையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளளது,

    சென்னை காஞ்சி

    சென்னை காஞ்சி

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, சேலம் மாவட்டங்களில் 6 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு ஊருக்கு போக மக்கள் ஆயத்தமாகி வரும்போது கனமழை பெய்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

    ஞாயிறு அதிகம் பெய்யும்

    ஞாயிறு அதிகம் பெய்யும்

    இதற்கிடையே இன்று மழை அதிகம் பெய்ய வாய்ப்பு இருந்தாலும் தீபாவளி நாளில் மழையின் தீவிரம் குறையக்கூடும் என்றும் ஆனால் மறுநாள் ஞாயிறு அன்று மீண்டும் பலம் பெறக்கூடும் என்றும் தனியார் வானிலை பதிவாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னையில் கனமழை

    சென்னையில் கனமழை

    நேற்று முன்தினம் சென்னையின் பல பகுதிகளிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்தது நுங்கம்பாக்கத்தில் 18.3 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 15.6 மி.மீ மழையும் காலை 8.30 மணி வரை மழை பெய்தது. அதன்பிறகு காலை முதல் மாலை வரையிலும் தொடர்ச்சியாக அவ்வப்போது கனமழை பெய்தது. நேற்றும் பல இடங்களில் சென்னையில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

    English summary
    The Indian Meteorological Department has forecast heavy rains in six districts, including Chennai, for the next six hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X