24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு
Recommended Video
சென்னை: அடுத்த வாரம் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்து இன்று பல்வேறு மாநிலங்களிளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக் கடலிலும், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடிக்கிறது.

மேலும் கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக. அடுத்த வாரம் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட வட தமிழகத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ மழை பெய்துள்ளது. பூண்டியில் 20 செ.மீ மழையும் , திருத்தணி மற்றும் தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், சோழவரத்தில் 13 செ.மீ மழையும், திருவிலாங்காட்டில் 12 செ.மீ மழையும், பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 6 செ.மீ மழையும், கிண்டியில் 36.செ.மீ மழையும். கொளப்பாக்கத்தில் 3.6 செ.மீ மழையும் பெய்துள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications