இன்று மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் வடசென்னைக்கும் இடையே கரையை கடக்கிறது.
இதனால் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. ஏற்கெனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ததால் சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

போக்குவரத்துக்கு தடை
சென்னையில் உள்ள 11 சுரங்கபாதைகள் நிரம்பியுள்ளதால் அவை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. அது போல் முக்கிய சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் அவையும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவதி
மழை நீருடன் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால் அங்கு தரைதளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி சோஃபா, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், விண்டோ ஏசியின் அவுட் டோர் யூனிட் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

5 மாவட்டங்கள்
ஒரு பக்கம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வந்தாலும் மறு புறம் மழை விட்டு விட்டு பலமாக பெய்துவருவதால் அந்த பணிகள் செய்தும் பலனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை தொடரும்
சென்னையில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளதால் ஏற்கெனவே புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், மூலகொத்தளம், செம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் மேலும் மழை என்றால் மேற்கொண்டு தண்ணீர் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலை முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications