Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதா? இந்த ஆவணங்கள் இருந்தாலே போதுமே.. ஆன்லைனில் ஈஸியாக நகல் பெறலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம் என்ன? பிறப்பு சான்றிதழை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன? தாமதமான பிறப்புச் சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது? சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய முடியுமா? அதற்கான வழிவகைகள் என்னென்ன?

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடனேயே பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டமாகும்.. இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது... ஆனால், குழந்தை எந்த ஊர் மருத்துவமனையில் பிறக்கிறதோ அந்த ஊர் பிறப்பு - இறப்பு பதிவாளர் மூலம்தான் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் வசிப்பிடத்தில் இருந்து குழந்தைகளின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது.

birth certificate

சான்றிதழ்கள்: பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969ன் கீழ் பிறப்புச் சான்றிதழ் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் 21 நாட்களுக்குள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பிறப்பு சான்றிதழ்கள் ஏன் அவசியமாகின்றன தெரியுமா? குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமானால், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க வேண்டுமானால், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர வேண்டுமானால், திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமானால், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவைகளை பெற வேண்டுமானால், பிறப்பு சான்றிதழ் கட்டாயமாகும்.

கட்டாய தேவையாகும்: அதுமட்டுமல்ல, இந்த பிறப்பு சான்றிதழ் ஒருவரின் அடையாளம் என்பதுடன், அதை வைத்துதான் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. அதனால் அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது.. அத்துடன், பிறப்பு சான்றிதழ் பெறுவதையும் அரசு தற்போது எளிதாக்கியிருக்கிறது.

பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு, சில ஆவணங்கள் அவசியம் தேவைப்படும்.. குறிப்பாக, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், பெற்றோரின் திருமணச் சான்றிதழ், மருத்துவமனையிலிருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று போன்றவை பிறப்புச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான ஆவணங்களாகும்.

பிழை திருத்தம்: அதேபோல, குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், குழந்தை பிறந்த இடம், முகவரி, பாலினம் ஆகியவற்றில் ஏதேனும் பிழை (Clerical error) ஏற்பட பெரும்பாலும் வாய்ப்புள்ளது.. அவ்வாறு பிறப்பு சான்றிதழில் பிழை ஏதாவது இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது.

இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது அணுகினால் போதும்.. பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று ஒரு மனுவை நீங்கள் தரவேண்டும். அத்துடன், குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்று, மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தர வேண்டும். இவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தந்துவிடுவார்கள்.

டவுன்லோடு: பிறப்பு சான்றிதழ்கள் சிலசமயம் தொலைந்துவிட்டால், மீண்டும் எளிதாக பெறலாம்.. 2018-க்கு முன் பிறந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்களை தொலைத்துவிட்டால், நீங்கள் இதற்கு முன்பு பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளரிடம் மீண்டும் மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழின் நகல் இருந்தால் போதும்.. நகல் இல்லாவிட்டால், குழந்தை பிறந்த தேதி,பிறந்த இடத்தைக்கூறி விண்ணப்பிக்கலாம்.

ஆனால், ஆன்லைனிலேயே இந்த சான்றிதழின் நகலை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.. எந்தவித செலவும் இல்லாமல், நாமே இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

சான்றிதழ் நகல்: தொலைந்த சான்றிழ் நகலுக்காக விண்ணப்பிக்கும்போது, சில ஆவணங்களை இணைக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, பிறப்புச் சான்றிதழின் இழப்பு அல்லது தொலைந்தது குறித்த உறுதிமொழி, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழின் நகலுக்கான விண்ணப்பப் படிவத்தை, உங்களது உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் இணையதளத்திற்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்: அந்த விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து, உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்தில், விண்ணப்பத்தை கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பக் கட்டணமும், பிறப்புச் சான்றிதழின் நகல் நகலைப் பெறுவதற்கான காலக்கெடுவும் மாநில அரசால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்தவகையில், பிறப்புச் சான்றிதழின் நகலுக்கான விண்ணப்பக் கட்டணம் 50 முதல் 100 ரூபாய் வரை இருக்கும்... பிறப்புச் சான்றிதழின் நகல் 15 முதல் 30 நாட்களுக்குள் பெறப்படும்... ஒருவேளை உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க வேண்டுமானால், உங்களது விண்ணப்ப எண்ணை கொண்டு, உங்களது உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியின் வெப்சைட்டை பார்வையிடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+