Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"க்ளைமேக்ஸ்".. அந்த போட்டோவை பாத்தீங்களா.. அதுவும் ஒரே கையெழுத்து.. பூரிக்கும் எடப்பாடி டீம்.. ஸ்பீடு

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அடுத்தக்கட்ட வியூகத்தை கையில் எடுத்து, மும்முரமாகி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி கொண்டு செல்லும் பணியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி வருகிறார்.. அத்துடன், தன்னுடைய ஆளுமையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் முயற்சியையும் மும்முரமாக கையில் எடுத்துள்ளார்.

கடந்த வாரம், எடப்பாடி பழனிச்சாமி விமான நிலைய ஓடுதள பஸ்ஸில் பயணம் செய்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவரும் பயணித்தார்.

அவர் திடீரென வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்தார்.. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார்.

 பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன்

இதன் காரணமாக ஏற்பட்ட மோதலையடுத்து 2 தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், கோவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.. இதில், சூலூர் கந்தசாமி, அம்மன் அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவிற்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொய் வழக்கு போடாதே, பழி வாங்காதே என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன..

 தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், மக்கள் திமுக மீது கோபமாக இருக்கிறார்கள்.. முன்னாள் முதல்வருக்கே, எதிர்க்கட்சி தலைவருக்கே இங்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் உள்ளது.. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை விட்டு விட்டு, தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.. கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை திமுக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. என்றார்.

 இன்பதுரை

இன்பதுரை

இதையடுத்து, அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை பேசும்போது, "திமுகவிடம் நீதி எதிர்பார்ப்பது கடைந்தெடுத்த மூட நம்பிக்கை... அவர்கள், காட்டாட்சியே நடத்துவார்கள்... எடப்பாடி பழனிசாமி மீது மட்டுமின்றி, அவரது மெய்க்காவலர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. போலீசாரை காப்பது எங்கள் பொறுப்பு. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வரும்.. ஆட்சி மாறும்... சட்டம் இரு பக்கமும் கூர்மையான ஆயுதம்.. அதே சட்டத்தை பயன்படுத்தி, நாங்களும் திருப்பி தாக்குவோம்" என்றார்.

 பழனிசாமி போட்டோ

பழனிசாமி போட்டோ

திமுகவுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபக்கம் நடந்து வரும்நிலையில், அதிமுகவை முழுமையாக தன் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பொதுச்செயலாளர் தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. முதற்கட்டமாக அதிமுக தொண்டர்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோவுடன் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும் படமும் பொறிக்கப்பட்டு அடையாள உரிமை சீட்டு என புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

 கலர் போட்டோ

கலர் போட்டோ

முன்பகுதியில் உறுப்பினர் உரிமை சீட்டு மற்றும் அமைதி, வளம், வளர்ச்சி என்றும், பின்பகுதியில் அதிமுக உறுப்பினர் பெயர், வார்டு எண், பகுதி, மாவட்டம், வயது, பாலினம், வரிசை எண், சேர்ந்த ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.. "அத்துடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்ற கையொப்பமும் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள உரிமை சீட்டு இருந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓட்டு போட உரிமை உண்டு என்கிறார்கள்.. இதை விநியோகிக்கும் பணியும் ஆரம்பமாகிவிட்டது..

 கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

அந்தவகையில், தென்சென்னை தெற்கு மேற்கு அதிமுக மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் உள்ள தொண்டர்களுக்கு புதிய அடையாள உரிமை சீட்டை, அக்கட்சியின் செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார்.. அப்போது அவர் பேசும்போது, 'தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட வேண்டும.. நம்முடைய மாவட்டம் முதலிடத்தில் இருக்க வேண்டும்.. எம்பி தேர்தல் பணியையும் இப்போதே பகுதி வட்ட வாரியாக தொடங்கி பணியாற்றி வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்றார்.. ஆக மொத்தம், ஒருபக்கம் ஓபிஎஸ் + மறுபக்கம் திமுக + இதற்கு நடுவில் பாஜக என "டீல்" செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அத்துடன், அதிமுக என்ற ஆலமரத்தை, மொத்தமாக தன்பிடியில் வைத்திருக்கும் உச்சக்கட்ட முயற்சியிலும் இறங்கி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+