24 மணி நேரம்தான்! ரேஷன் கடைகளுக்கு பறந்த சுளீர் உத்தரவு! மக்களுக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான துறை ரீதியான உத்தரவு ஒன்று இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ரேஷன் பொருட்கள் விற்பனை தமிழ்நாட்டில்தான் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் மாநிலம் முழுக்க பெருவாரியான மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

முக்கிய அறிவிப்புகள்
சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. கடைகள் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைகளில் குப்பை இருக்க கூடாது. அதேபோல் பொருட்கள் வைத்து இருக்கும் பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும். தரையில் அரிசி, சர்க்கரை இறைந்து இருக்க கூடாது.

எப்படி கொடுக்க வேண்டும்
அதை திரட்டி மக்களுக்கு கொடுக்க கூடாது. சுத்தத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக முக்கியமான துறை ரீதியான உத்தரவு ஒன்று இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேஷன் பொருட்களை திருடி விற்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சுற்றறிக்கை
இவர்களை சஸ்பெண்ட் செய்வதோடு இல்லாமல் உடனடியாக அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் அவர்கள் ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை தொடங்கி வேறு எந்த பொருட்களை திருடியது உறுதி செய்யப்பட்டாலும் அவர்களை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதோடு அருகில் இருக்கும் கிடங்குகளில் உடனே ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில் கடத்தப்பட்ட அரிசி, பருப்பை மீட்க வேண்டும்.

டிஸ்மிஸ்
24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். இதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications